twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகைகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு... பிரபல தயாரிப்பாளருக்கு 23 வருட சிறைத் தண்டனை!

    By
    |

    சென்னை: பாலியல் வன்கொடுமை வழக்கில் ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீனுக்கு 23 வருட சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

    Recommended Video

    Cinema Square: இன்றைய சினிமா செய்திகள்

    ஆஸ்கர் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன். இவர் வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைத்து, பாலியல் தொல்லை கொடுத்ததாக மிடூ புகார் எழுந்தது.

    இதில் பிரபல ஹாலிவுட் நடிகைகள் ஏஞ்சலினா ஜோலி, கைனெத் பால்ட்ரோ, கார டெலவிங்னி உள்பட 80 பேர் அவர் மீது பாலியல் புகார் கூறினார்கள்.

     வீணாக ஸ்பாயில் ஆன தனுஷ் இமேஜ்.. இந்த பிரபலத்துடன் தான் அமலா பால் லிவ்வின்னில் இருக்காராம்? வீணாக ஸ்பாயில் ஆன தனுஷ் இமேஜ்.. இந்த பிரபலத்துடன் தான் அமலா பால் லிவ்வின்னில் இருக்காராம்?

    ஹாலிவுட்டில் பரபரப்பு

    ஹாலிவுட்டில் பரபரப்பு

    இந்த பாலியல் புகார் ஹாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். 2006 ஆம் வருடம் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக, திரைப்பட தயாரிப்பு உதவியாளர் மிமி ஹலேயி என்பவரும், 2013 ஆம் ஆண்டு தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார் என்று பெயர் வெளியிட விரும்பாத நடிகை ஒருவர் உட்பட சிலர் வழக்கு தொடர்ந்தனர்.

    வலிப்பு நோயால்

    வலிப்பு நோயால்

    இந்த வழக்குகளின் விசாரணை அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அப்போது நடிகை அன்னபெல்லா சியோரா, சாட்சியம் அள்ளித்தார். அவர் கூறும்போது, ஹார்வி வெய்ன்ஸ்டீனால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டபோது, தான் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டதை போல உணர்ந்ததாக, கண்ணீருடன் கூறி இருந்தார்.

    தலைக்கு மேலே

    தலைக்கு மேலே

    அது அருவெறுப்பான சம்பவம். என் உடல் நடுங்கத் தொடங்கியது. என்ன நடக்கிறது என்று கூட எனக்குத் தெரியவில்லை. என் கைகளை தலைக்கு மேலே பிடித்து கொண்டு என்னைவிட மூன்று மடங்கு அதிகம் எடை உள்ள வெய்ன்ஸ்டீன் என்னை பாலியல் வன்கொடுமை செய்தார் என்றும் அவர் சொன்னார். 2017 ஆம் ஆண்டு பத்திரிகையில் இவர் பற்றிய மீடு புகார் வெளிவரும் வரை இவரால், என் உயிருக்கு ஆபத்து என்று பயந்திருந்தேன் என்றும் கூறியிருந்தார்.

    வெயின்ஸ்டின் குற்றவாளி

    வெயின்ஸ்டின் குற்றவாளி

    நடிகைகளின் இந்த பாலியல் புகார்களை வெயின்ஸ்டீன் மறுத்திருந்தார். இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம் வெயின்ஸ்டின் குற்றவாளி என்று கடந்த மாதம் தீர்ப்பளித்தது. நீதிபதி கூறும்போது, இது புதிய நாள் என்று நம்புகிறேன். ஹார்வி வெயின்ஸ்டீன் அவர் செய்த பாலியல் குற்றங்களுக்காகப் பொறுப்பேற்கப்படுகிறார். அவர் குற்றவாளி' என்றார்.

    23 வருட சிறை

    23 வருட சிறை

    தண்டனை விவரம் மார்ச் 11 ஆம் தேதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதைக் கேட்டதும் தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறினார், ஹார்வி வெயின்ஸ்டீன். நியூயார்க்கில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கான தண்டனை விவரம், அறிவிக்கப்பட்டது. அவருக்கு 23 வருட சிறைத் தண்டனை விதித்து நீதிபதி ஜேம்ஸ் புரூக் தீர்ப்பளித்தார்.

    English summary
    Harvey Weinstein has been sentenced to face 23 years of prison for raping an aspiring actress in 2013 and forcibly performing oral sex on a TV and film production assistant in 2006.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X