வெறும் உள்ளாடையுடன் நடந்து வரும் மாடல்கள்.. 3வது கணவருக்கு டிவி ஷோவில் லிப் லாக் கொடுத்த ஹெய்டி கிளம்!
ஜெர்மனி: பிரபல ஜெர்மனி மாடல் அழகியான ஹெய்டி கிளம்முக்கு 51 வயதாகிறது. ஒவ்வொரு வருஷமும் ஹாலோவீன் வந்துவிட்டால் சின்ராசை கையில் பிடிக்க முடியாது என்பது போல வித்தியாசமான உடைகளை அணிந்துக் கொண்டு ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிடுவார். கடந்த ஆண்டு ET படத்தில் வந்த ஏலியன் போல மாறி உலகளவில் ரசிகர்களை கவர்ந்தார்.
ஜெர்மனியின் நெக்ஸ்ட் டாப் மாடல் புதிய சீசன் ஆரம்பிக்கப் போகிறது. அதன் புரமோ வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சற்றுமுன் ஹெய்டி கிளம் வெளியிட்டு சர்வதேச ரசிகர்களை ஹேப்பியாக்கி உள்ளார்.

வெறும் ஜட்டியை மட்டும் அணிந்துக் கொண்டு ஆண் மாடல்கள் தண்ணீரில் நடந்து வரும் காட்சிகளை வெளியிட்டு ஹாட்னஸை கூட்டிய ஹெய்டி கிளம் தனது 3வது கணவருக்கு முத்த மழை பொழியும் காட்சிகளையும் வெளியிட்டு ரசிகர்களை வெறுப்பேற்றி வருகிறார்.
ஜெர்மனியின் நெக்ஸ்ட் டாப் மாடல்: பல வருடங்களாக ஜெர்மனியின் நெக்ஸ்ட் டாப் மாடல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் ஜெர்மனியின் பிரபல மாடல் அழகியான ஹெய்டி கிளம். புதிய சீசனுக்கான புரமோஷனை சூடு பறக்க ஆரம்பித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராமில் தற்போது வெளியிட்டுள்ள அதன் புரமோஷன் வீடியோ வேறலெவலில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
உள்ளாடையுடன் மாடல்கள்: இந்த நிகழ்ச்சியில் பெண் மாடல்கள் இல்லாமல், பலரும் ஆண் மாடல்களாகவே உள்ளனர். அதிலும், மேலாடை அணியாமல் அனைவரும் வெறும் உள்ளாடையுடன் தண்ணீரில் ரேம்ப்வாக் செய்து ஹெய்டி கிளம்மை குஷிப்படுத்தும் காட்சிகள் வேறலெவல் என ரசிகர்கள் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
3வது கணவருக்கு முத்த மழை: நடிகையும் மாடல் அழகியுமான ஹெய்டி கிளம் 1997ம் ஆண்டு ரிக் பிபினோ என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆனால், 2002ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். அதன் பின்னர், சீல் என்பவரை 2005ம் ஆண்டு திருமணம் செய்து 2014ம் ஆண்டு வரை வாழ்ந்து விவாகரத்து செய்து பிரிந்தார். கடைசியாக கடந்த 2019ம் ஆண்டு டாம் காலிட்ஸ் எனும் நடிகரை திருமணம் செய்துக் கொண்ட ஹெய்டி கிளம் தொடர்ந்து அவருடன் வாழ்ந்து வருகிறார். ஜெர்மனியின் நெக்ஸ்ட் டாப் மாடல் நிகழ்ச்சியில் தனது 3வது கணவருக்கு தொடர்ந்து லிப் லாக் முத்தம் கொடுத்த வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











