»   »  எனக்கு சான்ஸ் கொடுக்கலைனா அடி வெளுத்துடுவேன்: ஹீரோவை மிரட்டிய நடிகை

எனக்கு சான்ஸ் கொடுக்கலைனா அடி வெளுத்துடுவேன்: ஹீரோவை மிரட்டிய நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஃபாஸ்ட் அன்ட் ஃபியூரிஸின் அடுத்த பாகத்தில் தன்னை நடிக்க வைக்காவிட்டால் அடி வெளுத்துவிடுவேன் என நடிகை ஹெலன் மிர்ரன் ஹாலிவுட் நடிகர் வின் டீசலை மிரட்டியுள்ளார்.

வின் டீசல், பால் வாக்கர் உள்ளிட்டோர் நடித்த ஃபாஸ்ட் அன்ட் ஃபியூரிஸ் ஹாலிவுட் படம் ஹிட்டானது. அதன் பிறகு அந்த படத்தின் 7 பாகங்கள் வெளியாகி வெற்றி பெற்றன. இந்நிலையில் வின் டீசல், ட்வெய்ன் ஜான்சன், ஜேசன் ஸ்டேதம், மிஷல் ரோட்ரிகஸ் நடிப்பில் ஃபாஸ்ட் அன்ட் ஃபியூரியஸ் 8 படமாக்கப்பட்டுள்ளது.

Helen Mirren threatens to 'beat up' Vin Diesel

இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. இந்நிலையில் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது வாங்கிய 71 வயது ஹெலன் மிர்ரனுக்கு ஃபாஸ்ட் அன்ட் ஃபியூரிஸில் நடிக்கும் ஆசை வந்துள்ளது.

இது குறித்து வின் டீசல் கூறுகையில்,

கோல்டன் குளோப் விருது பார்ட்டியில் அருமையான நடிகையான ஹெலன் மிர்ரனை சந்தித்தேன். ஃபாஸ்ட் அன்ட் ஃபியூரிஸின் அடுத்த பாகத்தில் தன்னை நடிக்க வைக்காவிட்டால் உன்னை அடிப்பேன் என என்னை மிரட்டினார் என்றார்.

English summary
Helen Mirren 'threatened' to beat up actor Vin Diesel if he didn't give her a role in 'Fast and Furious'. Diesel has revealed how desperate the 71-year-old actress was for a part in the popular film franchise.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil