குரலால் மயக்கும் ஷகீரா காலை எப்படி வளைக்கிறார் பாருங்க..!
லண்டன்: விதம் விதமாக பாடி, உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் குவித்து வைத்திருக்கும் கொலம்பிய பாப் பாடகி ஷகீரா, கிட்டத்தட்ட சர்க்கஸ்காரியாக மாறி தனது கால்களை வளைத்து, குழைத்த விதம் பார்த்து அத்தனை பேரும் அசந்து போய் நிற்கிறார்கள்.
ஷகீரா என்றால் அவரது மின்னல் குரலும், மயக்கும் வசீகரமும்தான் நினைவுக்கு வரும். ஆனால் அவர் செய்த ஒரு காரியம் அவரைப் பார்த்து அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
தனது குரலை மட்டுமல்லாமல் தனது கால்களையும் விதம் விதமாக வளைக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளார் ஷகீரா.

36 வயதில் முத்துக் குரல்
36 வயதாகும் ஷகீரா கொலம்பியாவைச் சேர்ந்தவர் என்றாலும், கொலம்பியாவைத் தாண்டித்தான் அவருக்கு எக்குத்தப்பான ரசிகர்கள் உள்ளனர்.

மயக்கும் மாயக் குரலி
மயக்கும் மாயக் குரலுக்குச் சொந்தக்காரரான ஷகீராவின் பாட்டுக்கச்சேரியைக் கேட்க காத்திருக்கிறார்கள் கோடிக்கணக்கான ரசிகர்கள்.

கால்களை மடக்கி புது சாகசம்
இந்த நிலையில் தனது கால்களை மடக்கி புதுவிதமான சாகசத்தைச் செய்து மூக்கு மீது விரல் வைக்க வைத்துள்ளார் ஷகீரா.

பாம்பு மாதிரி...
உட்கார்ந்தநிலையில், அப்படியே தனது இரு கால்களையும் மடக்கி, முதுகுக்குப் பின்னால் கொண்டு வந்து இரு கால்களையும் தொட்டு கலக்கல் போஸ் கொடுத்துள்ளார் ஷகீரா.

இடுப்புக்குப் போட்டியாக
ஷகீராவின் இடுப்பு மின்னல் போல வளைந்து நெளிந்தாடும் என்பதை அறிந்த ரசிகர்களுக்கு அவரின் இந்த வித்தியாச போஸ் போனஸ் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளதாம்.


Click it and Unblock the Notifications











