Golden Globes 2024 - கோல்டன் குளோப் 2024.. விருதுகளை அள்ளிய ஓபன்ஹைமர்.. சிறந்த இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன்
சென்னை: 81ஆவது கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் அமெரிக்காவில் இருக்கும் பெவர்லி ஹில்டன் ஹோட்டலில் கோலாகலமாக நடந்தது. இதில் சிறந்த இயக்குநருக்கான விருதை கிறிஸ்டோபர் நோலன் ஓபன்ஹைமர் படத்துக்காக பெற்றார். அதேபோல் அந்தப் படத்தில் நடித்ததற்காக சில்லியன் மர்ஃபி சிறந்த நடிகருக்கான விருதை தட்டி சென்றார்.
சினிமா துறையில் உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படுவது கோல்டன் குளோப் விருது. ஆஸ்கருக்கு அடுத்ததாக இந்த விருது கௌரவமான ஒன்றாக கருதப்படுகிறது. இதுவரை 80 கோல்டன் குளோப் விருதுகள் விழா நடைபெற்றிருக்கிறது. இந்த சூழலில் 81ஆவது கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. அமெரிக்காவில் இருக்கும் பெவர்லி ஹில்டன் என்ற ஹோட்டலில் கோலாகலமாக நடந்த இந்த விழாவை காமெடி நடிகர் ஜோ கோய் தொகுத்து வழங்கினார்.'

நாமினேட்டான படங்கள்: இந்த விழாவில் சிறந்த மோஷன் பிக்சர் பிரிவில் ஓபன்ஹைமர், கில்லர் ஆஃபி தி ஃப்ளவர், மூன் மேஸ்ட்ரோ, ஃபாஸ்ட் லைவ்ஸ், அனாடமி ஆஃப் ஏ ஃபால், தி ஸோன் ஆஃப் இண்ட்ரஸ் ஆகிய படங்கள் நாமினேட் செய்யப்பட்டன. இதில் ஓபன்ஹைமர் படத்துக்கு விருது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்தது.
நாமினேட்டான இயக்குநர்கள்: அதேபோல் சிறந்த இயக்குநருக்கான பிரிவில் மேஸ்ட்ரோ படத்தின் இயக்குநர் பிராடில் கூப்பர், பாஸ்ட் லைவ்ஸ் படத்தின் இயக்குநர் சாங், ஓபன்ஹைமர் படத்தின் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன், பார்பி படத்தின் இயக்குநர் க்ரேட்டா கெர்விக், கில்லர் ஆஃப் தி ஃப்ளவர் மூன் படத்தின் இயக்குநர் மார்ட்டி ஸ்கோர்செஸ், புவர் திங்ஸ் படத்தின் இயக்குநர்ம் யோர்கோஸ் லாந்திமோஸ் போட்டியில் இருந்தனர்.
நாமினேட்டான சிறந்த நடிகர்கள்: மேலும் சிறந்த நடிகர்களுக்கான பிரிவில், ஆல் ஆஃப் அஸ் ஸ்ட்ரேஞ்சர்ஸ் பட நடிகர் ஆண்ட்ரூ ஸ்காட், சால்ட்பர்ன் படத்தில் நடித்த பேரி கியோகான், மேஸ்ட்ரோ படத்தில் நடித்த பிராட்லி கூப்பர், ஓபன்ஹைமர் படத்தில் நடித்த சில்லியன் மர்ஃபி, ரஸ்டின் படத்தின் கோல்மேன் டோமிங்கோ, கில்லர் ஆஃப் தி ஃப்ளவர் மூன் படத்தில் நடித்த டிகாப்ரியோ போட்டியில் இருந்தனர்.
நோலனுக்கு விருது: இந்நிலையில் சிறந்த இயக்குநருக்கான விருதை ஓபன்ஹைமர் படத்தின் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் தட்டி சென்றார். முன்னதாக பார்பி படத்தின் இயக்குநர் கெர்விக் வெல்வதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று பேச்சு எழுந்திருந்தது. ஆனால் நோலன் இந்த விருதை தட்டி சென்றார். இதனால் கிறிஸ்டோபரின் ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
சிறந்த நடிகர், நடிகை: அதேபோல் ஓபன்ஹைமர் படத்தில் நடித்த சில்லியன் மர்ஃபி சிறந்த நடிகருக்கான விருதையும், சிறந்த சப்போர்ட்டிங் ஆக்டருக்கான விருதை ஓபன்ஹைமர் படத்தில் நடித்த ராபர்ட் டவ்னியும் தட்டி சென்றனர். மேலும் சிறந்த நடிகைக்கான விருதினை லில்லி கிளாட்ஸ்டோன் கில்லர்ஸ் ஆஃப் தி ப்ளவர்ஸ் மூன் படத்தில் நடித்ததற்காக தட்டி சென்றார். அதுமட்டுமின்றி ஓபன்ஹைமர் படத்துக்காக சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் பிரிவில் லுட்விக் கோரன்சன்பெற்றார். மேலும் பாக்ஸ் ஆபிஸ் மற்று அச்சீவ்மெண்ட் பிரிவில் பார்பி திரைப்படம் கோல்டன் குளோப் விருதை பெற்றது


Click it and Unblock the Notifications











