ஹாலிவுட் படமான மார்வெல் எட்டர்னல்ஸ் எப்போது ரிலீஸ்? மார்வெல் இந்தியா வெளியிட்ட அசத்தல் அப்டேட்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் படமான மார்வெல் எட்டர்னல்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஹாலிவுட் படமான எட்டர்னல்ஸ் அமெரிக்க சூப்பர் ஹீரோ படமாகும். மார்வெர்ல் காஸ்மிக்ஸ் ரேஸை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது இப்படம்.

இந்தப் படத்தை மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மற்றும் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இப்படத்தை விநியோகம் செய்கிறது.

யாரெல்லாம் நடிக்கிறார்கள்?

யாரெல்லாம் நடிக்கிறார்கள்?

இந்தப் படம் மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் (MCU) 26 வது படம் ஆகும். பாட்ரிக் பர்லீ, ரியான் ஃபிர்போ மற்றும் காஸ் ஃபிர்போ ஆகியோரின் திரைக்கதையில் சோலோ ஜாவோ இந்த படத்தை இயக்கியுள்ளார்.

ஏஞ்சலினா ஜோலி

ஏஞ்சலினா ஜோலி

இந்தப் படத்தில் ஜெம்மா சான், ரிச்சர்ட் மேடன், குமயில் நன்ஜியானி, லியா மெக்ஹுக், பிரையன் டைரி ஹென்றி, லாரன் ரிட்லாஃப், பாரி கியோகன், டான் லீ, ஹரிஷ் பட்டேல், கிட் ஹரிங்டன், சல்மா ஹயக் மற்றும் ஏஞ்சலினா ஜோலி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

அதிகாரப்பூர்வ கவுண்ட்டன்

அதிகாரப்பூர்வ கவுண்ட்டன்

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை, படக்குழு ஒரு புதிய டீஸர் டிரெய்லரை வெளியிட்டனர். இதன் மூலம் ஒரு மாதத்திற்குள் படம் ரிலீஸ் ஆகிறது என்பதற்கான அதிகாரப்பூர்வ கவுண்ட்டவுனைத் தொடங்கியுள்ளனர்.

தீபாவளி உற்சாகமாக இருக்க போகிறது

தீபாவளி உற்சாகமாக இருக்க போகிறது

இதுதொடர்பாக மார்வெல் இந்தியா டீம் பதிவிட்டுள்ள டிவிட்டில், "தீபாவளி டென் டைம்ஸ் உற்சாகமாகியுள்ளது ! பெரிய திரைகளில் #எட்டர்னல்ஸ் வருவதற்கு ஒரு மாதம்" என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும் இந்தியாவில் இங்கிலிஷ், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆகும் என்றும் அறிவித்துள்ளனர்.

பான் இந்தியா படமாக

பான் இந்தியா படமாக

நவம்பர் 5ஆம் தேதி மார்வெல் எட்டர்னல்ஸ் படம் அமெரிக்காவில் ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்தியாவிலும் அதே தேதியில் தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது. இதன் மூலம் மார்வெல் எட்டர்னல்ஸ் படம் ஒரு பான் இந்தியா படமாக ரிலீஸ் செயயப்படுகிறது.

அக்ஷய் குமாரின் படம்

அக்ஷய் குமாரின் படம்

தீபாவளிக்கு இந்தியாவிலும் பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகர்களின் படம் ரிலீஸ் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது. பாலிவுட்டில் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில், 'சூரியவன்ஷி' படம் ரிலீஸ் ஆகிறது. இந்தப் படத்தின் மூலம் கத்ரீனா கைஃப் உடன் அக்‌ஷய் மீண்டும் இணைந்து நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X