Don't Miss!
- Finance
70 நாடுகளில் முதலீடு செய்த சீனா.. அடுத்தது யாரெல்லாம் திவாலாக போகிறார்கள்..!
- Technology
ரூ.9,000 கூட இல்ல.. அதை விட கம்மி விலைக்கு Jio-வின் புதிய 5G போன்!
- News
செவ்வாய் பெயர்ச்சி 2022: இனி இந்த ராசிக்காரர்களின் காட்டில் பணமழைதான்!..என்ஜாய்!!
- Sports
அவருக்கு இந்திய அணியில் வேலை இல்ல.. எங்க கூட கமெண்டரி பண்ண சொல்லுங்க.. DK வை சீண்டிய முன்னாள் வீரர்
- Lifestyle
நீங்க சாப்பிடும் இந்த உணவுகளில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளதாம்... இது மாரடைப்பை ஏற்படுத்துமாம்!
- Automobiles
ரூ.27.7 லட்சத்திற்கு அடாஸ் அம்த்துடன் ஹூண்டாய் டூஸான் விற்பனைக்கு அறிமுகம்... செம்ம ஸ்டைலா இருக்கு!
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
படவிழாவுக்கு பாவாடை அணிந்து வந்த பிரபல நடிகர்..விழுந்து விழுந்து சிரிக்கும் ரசிகர்கள்!
அமெரிக்கா : எதையாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என நினைக்கும் சிலர் இவ்வப்போது எதையாவது வித்தியாசமாக செய்து பேசுபொருளாகிவிடுவார்கள். அப்படி எதையோ செய்ய நினைத்த ஹாலிவுட் நடிகர் ஒரு குட்டி பாவாடையுடன் படவிழாவில் கலந்து கொண்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
நடிகர் அணிந்து வந்த இந்த உடையை ஆஸ்கார் விருது பெற்ற ஹான்ஸ் நிக்கோலஸ் மோட் வடிவமைத்துள்ளார்.
இந்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறிது
அடுத்த 4 மாசத்துக்கு ட்விட்டர் பக்கமே தலை வைத்து படுக்க மாட்டேன்.. நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆவேசம்!

புல்லட் ட்ரெயின்
டேவிட் லீட்ச் இயக்கத்தில் உருவாகி உள்ள புல்லட் ட்ரெயின் திரைப்படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். இப்படத்தில் பிராட் பிட், ஜோய் கிங், ஆரோன் டெய்லர், ஜான்சன் மற்றும் பலரின் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் அதிரடியான டிரைலர்கள் பார்வையாளர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. புல்லட் ட்ரெயின் திரைப்படம் ஆகஸ்ட் 5ந் தேதி உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியாக உள்ளது.

குட்டி பாவாடை
இந்நிலையில், புல்லட் ட்ரெயின் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி லாஸ் ஏஞ்சல்ஸில் சிவப்பு கம்பளத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் பிராட் பிட், பழுப்பு நிறத்தில் கால் முட்டி தெரியும் அளவுக்கு ஒரு குட்டி பாவாடை அணிந்திருந்தார். மேலும் அதற்கு தகுந்தபடி பூட்ஸுடன் கூலாக நடந்து வந்து அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தினார்.

காற்றோட்டாக உள்ளது
இந்த உடையை பார்த்து அனைவரும் ஆச்சரியம் அடைந்த போது, லண்டனில் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வருகிறது. இந்த வாரம் லண்டனின் வெப்பநிலை 40 டிகிரி வரை உயர்ந்துள்ளது. இதனால், இந்த உடை மிகவும் காற்றோட்டமாக உள்ளது ஆண்கள் அனைவரும் இதைப்பயன்படுத்திப்பாருங்கள் என்றார். மேலும், பேசிய அவர், நாம் அனைவரும் ஒருநாள் சாகப்போகிறோம், அதனால் எதையாவது வித்தியாசமாக செய்வோம் என்றும் கூறியுள்ளார். இணையத்தில் பிராட் பிட்டின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

மிகப்பெரிய படம்
நடிகர் பிராட் பிட் முக்கிய வேடத்தில் நடித்துள்ள புல்லட் ட்ரெயின் திரைப்படம் 90 மில்லியன் அமெரிக்க டாலர் பட்ஜெட்டில் உருவாகி உள்ளது. இந்த படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் ஜப்பானிய நாவல் ஒன்றை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது என்பதும், ஜப்பானிய மொழியிலும் இந்த படம் ரிலீஸாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.