ஹாலிவுட்டில் அடுத்த சோகம்.. ராம்போ பட நடிகர் பிரையன் டென்னஹி உயிரிழப்பு.. ஆனால் கொரோனா இல்லை!

லாஸ் ஏஞ்சல்ஸ்: பழம்பெரும் ஹாலிவுட் நடிகரான பிரையன் டென்னஹி உயிரிழந்துள்ளார்.

உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் பல ஹாலிவுட் நடிகர்களை தொடர்ந்து பலி வாங்கி வரும் நிலையில், பிரையன் டென்னஹியின் மரணமும் கொரோனாவால் நிகழ்ந்ததா என்ற சந்தேகம் யாருக்கும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக, அவரது மகள் தனது சமூக வலைதள பக்கத்தில் விளக்கமாக பதிவிட்டுள்ளார்.

Hollywood actor Brian Dennehy dies at 81

81 வயதான பிரையன் டென்னஹி, வயது மூப்பின் காரணமாகவே உயிரிழந்ததாக அவரது மகள் எலிசபெத் டென்னஹி தெரிவித்துள்ளார். மேலும், தனது தந்தைக்கு கொரோனா பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்றும் அவரது மகள் விளக்கமளித்துள்ளார்.

டாமி பாய், ராம்போ ஃபர்ஸ்ட் பிளட், கோக்கூன் உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தவர் நடிகர் பிரையன் டென்னஹி.

இரண்டு டோனி விருதுகளை வென்றுள்ள பிரையன் டென்னஹி, 2001ம் ஆண்டு டிவியில் ஒளிபரப்பான டெத் ஆஃப் எ சேல்ஸ்மேன் தொடருக்காக கோல்டன் குளோப் மற்றும் SAG விருதுகளையும் பெற்றுள்ளார்.

பிரையன் டென்னஹியின் இறப்பு செய்தியை அறிந்த ராம்போ நடிகர் சில்வஸ்டர் ஸ்டாலன் தனது ட்விட்டர் பக்கத்தில், "சிறந்த நடிகர் பிரையன் டென்னஹி நம்மை விட்டுச் சென்று விட்டார். அவருடைய நடிப்புத் திறமை ராம்போ படத்திற்கு மிகவும் உறுதுணையாக இருந்தது. இந்த உலகம் சிறந்த நடிகர் ஒருவரை இழந்து நிற்கிறது" என உணர்ச்சிகரமான இரங்கலை தெரிவித்துள்ளார்.

சில்வஸ்டர் ஸ்டாலனை தொடர்ந்து பிரையன் டென்னஹியுடன் பணிபுரிந்த பல ஹாலிவுட் நடிகர்களும் மூத்த கலைஞரின் இறப்புக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X