Christian Oliver: அதிர்ச்சி.. 2 மகள்களுடன் பிரபல ஹாலிவுட் நடிகர் மரணம்.. விமான விபத்தால் பேரிழப்பு
லாஸ் ஏஞ்சல்ஸ்: தனி விமானத்தில் தனது இரு செல்ல மகள்களுடன் சென்ற பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஓலிவர் (Christian Oliver) விபத்து ஏற்பட்டு அகால மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சினிமா பிரபலங்கள் தங்களுக்கென தனி விமானங்களை வைத்துக் கொண்டு குடும்பத்துடன் அடிக்கடி பிரைவேட்டாக வெளிநாடுகளுக்கும் தீவுகளுக்கும் சென்று வருவது வழக்கம். தி குட் ஜெர்மன், ஸ்பீடு ரேஸர் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சுற்றுலாவுக்கு சென்ற இடத்தில் இப்படி விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
1972ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி ஜெர்மனியில் பிறந்த கிறிஸ்டியன் ஆலிவர் ஹாலிவுட் படங்களில் துணை நடிகராக நடிக்கத் தொடங்கி பல வெற்றிப் படங்களில் நடித்து வந்தார். 51 வயதான இவர் தனது இரு செல்ல மகள்களுடன் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு கரிபியன் தீவுகளுக்கு சென்றிருக்கிறார். விமான பயணியுடன் சென்ற குட்டி விமானம் திடீரென கோளாறு ஏற்பட்ட நிலையில், விபத்தில் சிக்கியதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஹாலிவுட் நடிகர் மரணம்: 1994ம் ஆண்டு வெளியான சேவ்ட் பை தி பெல் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானாவர் கிறிஸ்டியன் ஆலிவர். ஜியார்ஜ் க்ளூனி நடித்த குட் ஜெர்மன் படத்தில் நடித்து பிரபலமான இவர் 2008ம் ஆண்டு வெளியான ஸ்பீடு ரேஸர் படத்தில் நடித்தும் பாப்புலரானார். தனது குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாட தனி விமானத்தில் கரிபியன் தீவுகளுக்கு சென்ற இடத்தில் திடீரென ஏற்பட்ட விமான விபத்து காரணமாக உயிரிழந்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
10 வயது 12 வயது குழந்தைகள்: பெக்குயா எனும் இடத்தில் இருந்து சிறிய தீவுகளை கொண்ட கிரனாடைன்ஸ் பகுதிக்கு தனது இரு மகள்களான மடிட்டா (10 வயது), அனிக் (12 வயது) குழந்தைகளுடன் சென்ற போது ஏற்பட்ட விபத்து காரணமாக இந்த மூவருடன் சேர்த்து விமான பயணி என மொத்தம் 4 பேரின் உடல் கடந்த 4ம் தேதி போலீஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளது. கிறிஸ்டியன் ஆலிவர் தனது மனைவி ஜெஸிகா மஸூரை கடந்த 2021ம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்த நிலையில், தனது மகள்களுடன் மட்டும் தனித்தீவுக்கு விடுமுறையை கொண்டாட சென்ற இடத்தில் இப்படியொரு துர் சம்பவம் நிகழ்ந்தது. குழந்தைகளை இழந்த துக்கத்தில் ஜெஸிகா வாடி வருகிறார். ஹாலிவுட் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











