படப்பிடிப்பு செட்டில் பிரபல நடிகர் ஃபேர் வெல் ஸ்பீச்... கண்ணீர்விட்டு கதறி அழுது உருக்கம்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: நோ டைம் டூ டை படப்பிடிப்பு செட்டில் ஃபேர்வெல் ஸ்பீச் கொடுத்த பிரபல ஹாலிவுட் நடிகர் டேனியல் க்ரேக் கண்ணீர்விட்டு கதறியழுத வீடியோ வைரலாகி வருகிறது.
ஜேம்ஸ் பாண்ட் பட சீரிஸின் 25வது படமாக நோ டைம் டூ டை படம் உருவாகி வருகிறது. இந்தப் படம் இயான் புரடெக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்தப் படத்தை கேரி ஜோஜி இயக்கியுள்ளார். இதில் பிரபல ஹாலிவுட் நடிகரான டேனியல் க்ரேக் ஜேம்ஸ் பாண்ட் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஜேம்ஸ் பாண்டுக்கு ரசிகர்கள்
மேலும் ராமி மாலேக், லீ செய்டக்ஸ், லாஷனா லின்ச், பென் விஷா, நோமி ஹாரிஸ், ஜெஃப்ரி ரைட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இங்கிலாந்தின் ரகசிய உளவாளி என்ற ஜேம்ஸ் பாண்ட் கற்பனை கதாபாத்திரத்துக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு ரிலீஸ் ஆகவேண்டியது
ஷான் கானரி, திமோத்தி டால்டன், பியர்ஸ் பிராஸ்னன், டேனியல் க்ரேக் என பலர் ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடித்துள்ளனர். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே இப்படம் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக இப்படத்தை அறிவித்த நேரத்தில் ரிலீஸ் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது.

வரும் 30 ஆம் தேதி ரிலீஸ்
தொடர்ந்து பல முறை இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றி அமைக்கப்பட்டது. இந்நிலையில் இந்தப் படம் வரும் 28ஆம் தேதி லண்டனில் உள்ள ராயல் ஆல்பர்ட் ஹாலில் திரையிடப்படவுள்ளது. இதனை தொடர்ந்து வரும் 30 ஆம் தேதி பிரிட்டனிலும், அக்டோபர் 8ஆம் தேதி அமெரிக்காவிலும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

ஃபேர்வெல் ஸ்பீச்
மேலும் இந்தியாவிலும் செப்டம்பர் 30 ஆம் தேதி நோ டைம் டூ டை படம் ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நோ டைம் டூ டை படப்பிடிப்பின் கடைசி நாளில் படத்தின் ஹீரோவான டேனியல் க்ரேக் படப்பிடிப்பு தளத்தில் உருக்கமான ஃபேர்வெல் ஸ்பீச் கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.

கண்ணீர் விட்டு அழுத நடிகர்
அந்த வீடியோவில் பேசிய நடிகர் டேனியல் க்ரேக் ஒரு கட்டத்தில் ஓவர் எமோஷனலாகி கதறி அழுதுள்ளார். அவர் பேசியிருப்பதாவது, "இங்கு நிறைய பேர் என்னுடன் ஐந்து படங்களில் வேலை செய்துள்ளனர். மேலும் இந்த படங்களைப் பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்பதைப் பற்றி நிறைய விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கிறது என்று எனக்குத் தெரியும்...

கண்கள் கலங்கிய ஹாலிவுட் நடிகர்
ஆனால் இந்த திரைப்படத்தின் ஒவ்வொரு நொடியையும் நான் நேசித்தேன். குறிப்பாக இந்த படம், ஏனென்றால் நான் தினமும் காலையில் எழுந்திருக்கிறேன், உங்களுடன் வேலை செய்ய எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அது என் வாழ்வின் மிகப்பெரிய கவுரவம் என கூறி கண்கள் கலங்கியுள்ளார். அவரது இந்த உருக்கமான பேச்சை பார்த்து படக்குழுவினரும் கலங்கியுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











