கொரோனாவில் இருந்து காப்பாற்றும் ஆயுதம்.. ரகசியத்தை அம்பலப்படுத்திய ஹாலிவுட் நடிகர்!
தென் கொரியா: ஹெல்பாய் படத்தில் நடித்த ஹாலிவுட் நடிகர் டேனியல் டே கிம்முக்கும் சமீபத்தில் கொரோனா நோய் தாக்கி இருந்தது.
Recommended Video
இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தான் படிப்படியாக மீண்டு வருவதாகவும், தன்னை காப்பாற்றும் ஆயுதம் குறித்தும் முதன்முறையாக தென் கொரிய நடிகர் டேனியல் டே கிம் மனம் திறந்துள்ளார்.
ஏழை, பணக்காரர்கள் வித்தியாசமின்றி, ஹாலிவுட் நடிகர்கள், பிரதமர்கள் என அனைவரையும் கொரோனா கதிகலங்க வைத்து வருகிறது

ஹாலிவுட் நடிகர்கள்
கொரோனா வைரஸ் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்த நிலையில், அதை கண்டுகொள்ளாமல் ஷூட்டிங்கில் இருந்த ஹாலிவுட் நடிகர் டாம் ஹேங்ஸ், அவரது மனைவி ரிட்டா வில்சன், இத்ரிஸ் எல்பா அவரது மனைவி சபரினா, இந்திரா வர்மா, மற்றும் ஜேம்ஸ்பாண்ட் பட நடிகை ஓல்கா குரிலென்கோ உள்ளிட்ட பலருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

டேனியல் டே கிம்
லாஸ்ட், ஹெல்பாய், ஸ்பைடர்மேன் 2, இன்சர்ஜண்ட், ஹல்க், கேவ், மொமெண்டம், சின் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள தென் கொரிய நடிகரான டேனியல் டே கிம்முக்கும் சமீபத்தில், கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தனிமைப்படுத்தப்பட்ட அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குணமாகி வருகிறார்
பிரபல ஹாலிவுட் நடிகரான டேனியல் டே கிம், கொரோனா வைரஸ் பாதிப்பால், தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அண்மையில், தனது உடல் நலம் தேறி வருவதாகவும், அதற்கு ஒரு சீக்ரெட் வெப்பன் தான் காரணம் என்றும் மனம் திறந்து பேசியுள்ளார்.

சீக்ரெட் வெப்பன்
டேனியல் டே கிம்மை குணப்படுத்தி வரும் சீக்ரெட் வெப்பன் வேறொன்றும் இல்லை. பொதுவாக மலேரியா நோய் பாதித்தவர்களுக்கு கொடுக்கப்படும் 'hydroxychloroquine' என்ற மருந்து தான் தன்னையும் குணப்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வர அந்த மருந்து உதவி செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கண்காணிப்பில்
கொரோனா வைரஸ் பாதிப்பு டேனியல் டே கிம்முக்கு 80 சதவீதத்துக்கு மேல் குறைந்திருந்தாலும், இன்னமும் தனிமைப்படுத்தப்பட்டு, தொடர் கண்காணிப்பிலே இருக்கிறார். விரைவில், கொரோனா பாதிப்பில் இருந்து தான் முற்றிலுமாக குணமாகி விடுவேன் என்றும், மருத்துவர்களுக்கு தனது நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications