காரில் இருந்து தவறி விழுந்த நடிகர்.. ஒருவார போராட்டம்.. இன்று உயிர்பிரிந்தது!
சென்னை: ஹாலிவுட் குழந்தை நட்சத்திரமான ஹட்சன் மீக், காரில் அலபாமா சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இவர், 2014ம் ஆண்டு "தி சாண்டா கான்" என்ற படத்தில் நடித்து சினிமாவில் தனது பயணத்தை தொடங்கினார். இதுமட்டுமில்லாமல், "MacGyver" மற்றும் "Legasis" போன்ற பல நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கேற்றுள்ளார். இதைத்தொடர்ந்து 2017ஆம் ஆண்டு "பேபி டிரைவர்" என்ற படத்தில், ஆன்சல் எல்கார்ட்டின் பேபி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரிடத்திலும் பாராட்டை பெற்றார்.

திறமையான நடிகர்: மீக் ஆக்டிங் அவுட் அகாடமியில் உறுப்பினராக இருந்த மீக் வெஸ்டாவியா ஹில்ஸ் பள்ளியில் படித்து வந்துள்ளார். நடிப்பு மட்டுமில்லாமல் கால்பந்து வீரரான மீக் தனது பள்ளிக்காக கால்பந்து விளையாடி சான்றிதழை பெற்றுள்ளார்.மேலும்13 வயதிலேயே, ஸ்கூபா டைவர் சான்றிதழை பெற்றுள்ளார்.
குறைவான வாழ்க்கை: 16 வயதே ஆன, ஹட்சன் மீக் டிசம்பர் 16ந் தேதி வெஸ்டாவியா ஹில்ஸ் பகுதியில் இருந்து, அலபாமாவிற்கு காரில் சென்று கொண்டிருந்த போது, காரில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்தார். இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். இவரது மறைவு அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரின் பெற்றோர், மீக்கின் மறைவு குறித்து இன்ஸ்டாகிராமில் உருக்கமாக தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளனர். அதில், மிக் "இன்றிரவு இயேசுவுடன் இருக்க சென்றுவிட்டார். எங்கள் இதயத்தை உடைத்துவிட்டார். இந்த பூமியில் அவர் வாழ்ந்த 16 ஆண்டுகள் மிகவும் குறுகியதாக இருந்தாலும், அவர் பலவற்றை சாதித்துவிட்டார் என பதிவிட்டுள்ளனர்.
விபத்து தான்: நடிகர் ஹட்சன் மீக் திடீர் மரணம் ஒரு விபத்து என்று ஜெபர்சன் கவுண்டி கரோனர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. விபத்து நடந்த போது மிக், போதைப்பொருள் அல்லது ஆல்கஹாலை பயன்படுத்தவில்லை என்றும், அவர் அலபாமா செல்லும் போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் சிக்கி காயமடைந்தார். அவரை உடனடியாக மீட்டு, மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த போதும், சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று உயிரிழந்துவிட்டதாக, ஜெபர்சன் கவுண்டி கரோனர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











