ஆஸ்கார் விருது நடிகர் கெவின் ஸ்பேசி மீது பாலியல் புகார்.. 4 வழக்குகள் பதிவு

லண்டன் : ஹாலிவுட்டில் யூசுவல் சஸ்பெக்ட்ஸ், அமெரிக்கன் பியூட்டி உள்ளிட்ட புகழ்பெற்ற படங்களில் நடித்துள்ளவர் நடிகர் கெவின் ஸ்பேசி.

இவர் தன்னுடைய சிறப்பான நடிப்பிற்காக ஆஸ்கர் விருதை வென்றவர். சில வெப் தொடர்களிலும் இவர் சிறப்பாக நடித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த 2000ம் ஆண்டுகளில் பிரிட்டனில் மூன்று ஆண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இவர்மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நடிகர் கெவின் ஸ்பேசி

நடிகர் கெவின் ஸ்பேசி

நடிகர் கெவின் ஸ்பேசி யூசுவல் சஸ்பெக்ட்ஸ், அமெரிக்கன் பியூட்டி, சூப்பர்மேன் ரிட்டர்ன்ஸ், செவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ் பெற்றவர். நெட்பிளிக்சில் வெளியான ஹவுஸ் ஆப் கார்ட்ஸ் அரசியல் தொடரிலும் இவரது நடிப்பு மிகுந்த பாராட்டுக்களை பெற்றது. இதன் விறுவிறுப்பான காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

ஆஸ்கர் வென்ற நடிகர்

ஆஸ்கர் வென்ற நடிகர்

தொடர்ந்து கடந்த 2004 முதல் 2015 வரை லண்டனின் ஓல்ட் விக் திரையரங்கின் இயக்குநராகவும் இவர் பணியாற்றியுள்ளார். இவரது சிறப்பான நடிப்பிற்காக இவருக்கு ஆஸ்கர் விருதும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது அமெரிக்காவில் வசித்துவரும் இவர்மீது லண்டன் நீதிமன்றத்தில் பாலியல் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

3 ஆண்கள் புகார்

3 ஆண்கள் புகார்

அதில் கடந்த 2005, 2008 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் இவர் 3 ஆண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. 62 வயதான கெவின் இந்த பாலியல் குற்றச்சாட்டுகளை ஆரம்பத்தில் மறுத்தார். ஆனால் ஸ்காட்லாந்து யார்ட் போலீசார் தொடர் விசாரணையில் இவரது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

4 வழக்குகள் பதிவு

4 வழக்குகள் பதிவு

பாதிக்கப்பட்ட 3 ஆண்கள் லண்டன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், கெவின்மீது இது தொடர்பாக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 2017ல் சிறுவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அதற்காக கெவின் தண்டனை பெற்றது குறிப்பிடத்தக்கது.

வாய்ப்புகள் பறிப்பு

வாய்ப்புகள் பறிப்பு

இதையடுத்து அவர் பல திரைப்படங்களில் இருந்து நீக்கப்பட்டார். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்தார். தற்போது இந்த மூவரில் அந்தோணி ராப் என்ற நடிகர், தான் 14 வயதாக இருந்தபோது, பார்ட்டி ஒன்றிற்கு அழைத்துச் சென்ற கெவின், தன்னிடம் அத்துமீறியதாக தெரிவித்துள்ளார்.

கெவின் விரக்தி

கெவின் விரக்தி

இந்தக் குற்றச்சாட்டுகளை அடுத்து முன்னதாக இதுகுறித்து பேசிய கெவின் ஸ்பேசி, இதனால் தன்னுடைய வாழ்க்கையில் தான் அனைத்தையும் இழந்து விட்டதாக தெரிவித்திருந்தார். தன்னுடைய உலகமே ஒட்டுமொத்தமாக மாறியதாகவும், வேலை, உறவுகள், தன்னுடைய கேரியர் என அனைத்தையும் சில மணிநேரங்களில் தான் இழந்து விட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X