கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகர் மரணம்.. திரைத்துறையினர் அதிர்ச்சி!

சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகர் மார்க் ப்ளம் காலமானார். அவருக்கு வயது 69.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் ஆட்டி படைத்து வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 27, 467 பேர் மரணமடைந்துள்ளனர்.

6 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்காதான் முதலிடத்தில் உள்ளது.

ஹாலிவுட் நடிகர்கள்

ஹாலிவுட் நடிகர்கள்

கொரோனா வைரஸின் தாக்குதலால் பல்வேறு நாட்டு தலைவர்களும், அமைச்சர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசியல் தலைவர்கள், நடிகர் நடிகைகள் என பலரும் கொரோனா வைரஸிடமிருந்து தப்ப முடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர். கொரோனா வைரஸால் ஹாலிவுட் நடிகர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மார்க் ப்ளம் மரணம்

மார்க் ப்ளம் மரணம்

அந்த வகையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல ஹாலிவுட் நடிகர் மார்க் ப்ளம் திடீரென மரணமடைந்துள்ளார். 69 வயதான நடிகர் மார்க் ப்ளம் 1970-ம் ஆண்டில் இருந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். 1985-ல் வெளியான ‘டெஸ்பரேட்லி சிக்கிங் சூஸன்' என்ற படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்ததாக பாராட்டப்பட்டார்.

மார்க் ப்ளமின் நடிப்பு

மார்க் ப்ளமின் நடிப்பு

ஜஸ்ட் பிட்வீன் பிரண்ட்ஸ், க்ரொக்கடைல் டண்டி, பிளசண்ட் டே, லவ்சிக், தி பிரசிடியோ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் மார்க் ப்ளம். தனது தனித்துவமான நடிப்பினால் மிகக் குறுகிய காலத்திலேயே அதிக ரசிகர்களை கொண்டார் மார்க் ப்ளம். அவர் நடித்த ஒவ்வொரு படத்திலும் அவரது நடிப்பே பிரதானமாக பேசப்படும்.

கொரோனாவால் மரணம்

கொரோனாவால் மரணம்

மார்க் ப்ளம் ஏராளமான தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மார்க் ப்ளம் நேற்று காலமானார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மார்க் ப்ளம் சிகிச்சை பலனின்றி இறந்ததாக நடிகரும் அவரது குடும்ப நண்பருமான லீ வில்காஃப் தெரிவித்துள்ளார். மேலும் மார்க் ப்ளமுக்கு ஆஸ்துமா பிரச்சனை இருந்ததும் அவரது நிலைமையை மோசமாக்கியதாகவும் தெரிவித்திருக்கிறார்.

மடோனா இரங்கல்

மடோனா இரங்கல்

மார்க் ப்ளமின் மரணத்தால் ஹாலிவுட் காரர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ப்ளமின் மரணத்திற்கு ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகையும் பாப் பாடகியுமான மடோனா தனது இன்ஸ்டா பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

போட்டோக்களை பகிர்ந்து

போட்டோக்களை பகிர்ந்து

டெஸ்பிரேட்லி சீக்கிங் சூசன் என்ற படத்தில் கேரி கிளாஸ் என்ற கதாப்பாத்தில் நடிகை மடோனாவுடன் இணைந்து நடித்துள்ளார் ப்ளம். அந்தப் படம்தான் நடிகை மடோனாவுக்கு முதல் படம் ஆகும். ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் மார்க் ப்ளமுடன் எடுத்த போட்டோக்களை பகிர்ந்து அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர்களுக்கு சிகிச்சை

ஏற்கனவே ஹாலிவுட் நடிகர்கள் இத்ரிஸ் எல்பா, கிறிஸ்டோபர் ஹிவ்ஜு, ஹாலிவுட் நடிகை இந்திரா வர்மா, ஸ்பெயின் நடிகை இட்ஸியார் இட்னோ ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ், நடிகை ஒல்கா குரிலென்கோ ஆகியோர் கொரோனா காய்ச்சலில் சிக்கி சிகிச்சை மூலம் குணமடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X