»   »  ஹாலிவுட் ஸ்டார் மார்கன் ப்ரீமேன் பேத்தியை பேய் ஓட்டுவதாக கூறிக் கொன்ற காதலன்

ஹாலிவுட் ஸ்டார் மார்கன் ப்ரீமேன் பேத்தியை பேய் ஓட்டுவதாக கூறிக் கொன்ற காதலன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்செல்ஸ்: மிகவும் புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகரும் இயக்குனருமான மார்கன் ப்ரீமேனின் பேத்தி கொலை செய்யப்பட்டு இருக்கிறார், அவருக்கு பேய் ஓட்டுவதாகக் கூறி அவரது முன்னாள் காதலன் இந்த செயலை செய்திருக்கிறான்.

மிகப் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகரான மார்கன் ப்ரீமேனின் முதல் மனைவியின் பேத்திதான் தற்போது இறந்திருப்பவர், இறந்த பெண்ணின் பெயர் ஈ டீனா ஹைன்ஸ் (33).

Hollywood Actor Morgan Freeman's step-granddaughter 'murdered by ex-boyfriend

நியூயார்க் நகரின் மத்தியில் ஈ டீனா விற்கு பேய் ஓட்டுவதாகக் கூறி அவரது முன்னால் காதலன் அவளைக் கொலை செய்திருக்கிறான், இதனால் ஏராளமான கத்திக் குத்துகளை வாங்கிய ஈ டீனா கொடூரமான முறையில் இறந்திருக்கிறார்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த நியூயார்க் நகரவாசிகள் "அந்தப் பெண்ணை கத்தியால் குத்திக் கொண்டு பிசாசுகளே இயேசு கிறிஸ்துவின் பெயரால் நான் உங்களைத் துரத்துகிறேன், பேய்களே இவள் உடலை விட்டு வெளியே செல்லுங்கள் என்று அவளின் காதலன் கூறியதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தைப் பார்த்த நகரவாசிகள் அந்தப் பெண்ணின் அலறலைக் கேட்டு நியூயார்க் போலீசிற்கு தகவல் அளித்துள்ளனர், ஆனால் அவர்கள் வருவதற்குள் எல்லாம் முடிந்து விட்டது.

இந்த சம்பவத்திற்குப் பின் மார்கன் ப்ரீமேன் பின்வருமாறு கூறியிருக்கிறார் "இந்த உலகம் அவளின் கலைத்திறமையை நன்கு அறியும், துரதிர்ஷ்டவசமாக அவள் இறந்து விட்டாள். கோடானுகோடி நட்சத்திரங்களின் இடையில் அவளும் ஒரு நட்சத்திரமாக மாறி வானில் மின்னுவாள்.

அவளின் ஆத்மா சாந்தி அடையட்டும்" என்று கூறியிருக்கிறார் தனது முதல் மனைவியின் பேத்தி என்றபோதிலும் மார்கன் ப்ரீமேன் அவளிடம் மிகுந்த அன்பு பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

மார்கன் ப்ரீமேனுடன் கைகோர்த்து திரையுலக விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் பலமுறை நடைபோட்டிருக்கிறார் ஈ டீனா, அந்த அளவிற்கு அந்தப் பெண்ணிடம் அன்பு செலுத்தினார் மார்கன் ப்ரீமேன்.

ஆனால் முட்டாள்தனமான காதலனால் அவள் தற்போது இறந்து விட்டாள், ஈ டீனாவின் முட்டாள் காதலனைக் கைது செய்த நியூயார்க் போலீசார் தற்போது அவனுக்கு கொலம்பியா மருத்துவமனையில் வைத்து மனநோயைக் குணப்படுத்தும் சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கின்றனர்.

English summary
Hollywood Actor Morgan Freeman's step-granddaughter 'murdered by ex-boyfriend, as he tried to perform EXORCISM on her'.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil