மூளையில் கட்டி.. சிகிச்சை பெற்று வந்த பிரபல ஹாலிவுட் நடிகர் திடீர் மரணம்.. திரையுலகம் இரங்கல்!

By

லாஸ் ஏஞ்சல்ஸ்: மூளையில் ஏற்பட்ட கட்டிக்காக சிகிச்சை பெற்று வந்த பிரபல ஹாலிவுட் நடிகர் திடீரென மரணமடைந்தார்.

பிரபல ஹாலிவுட் நடிகர் சாம் லாயிட். இவர் ரைசிங் சன், ஸ்கோர்சர், பேக் மை மிட்நைட், எக்ஸ் டெர்மினேட்டர்ஸ், சூப்பர் காபெர்ஸ் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

Hollywood Actor Sam Lloyd Passes Away At 56

டபுள் ரஷ், கோச், மேட் எபவுட் யு, ஸ்பின் சிட்டி உட்பட எராளமான டிவி தொடர்களிலும் நடித்துள்ளார்.

இவர் நடித்த 'ஸ்க்ரப்ஸ்' என்ற மெடிக்கல் காமெடி டிராமா தொடர் இவருக்கு அதிகமான புகழை பெற்றுத் தந்தது. இவருக்குத் திடீரென உடல் நிலை மோசமானதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அவருக்கு மூளையில் கட்டி இருப்பது தெரியவந்தது. அதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உயிரிழந்தார். அவருக்கு வயது 56. இதை அவரது ஏஜென்ட் உறுதிப்படுத்தியுள்ளார். மறைந்த சாம் லாயிட், பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டோபர் லாயிடின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. சாம் லாயிடுக்கு வனேஸ்சா என்ற மனைவியும் வெஸ்டன் என்ற மகனும் உள்ளனர்.

அவர் மறைவை அடுத்து ஹாலிவுட் மற்றும் சின்னத்திரை நடிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X