Tom Cruise: டாம் குரூஸ் அதிரடியில் மிஷன் இம்பாசிபள் படத்தின் டீசர்.. வாவ் ரிலீஸ் டேட் அறிவிச்சாச்சு!

சென்னை: நடிகர் டாம் குரூஸ் நடிப்பில் உருவாகி வரும் மிஷன் இம்பாசிபிள் படத்தின் எட்டாவது சீரிஸ் மிகவும் பிரம்மாண்டமான வகையில் அதிகமான பொருட்செலவில் உருவாகி வருகிறது. கடந்த 1996ம் ஆண்டில் ஒரு இந்த படத்தின் முதல் சீரிஸ் வெளியான நிலையில் அடுத்தடுத்து ஏழு சீரிஸ்கள் வெளியாகி சர்வதேச அளவில் ரசிகர்களின் வரவேற்பையும் அதிகமான வசூலையும் பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் எட்டாவது சீரிஸ் தற்போது உருவாகி வருகிறது. இதற்கான டீசர் தற்போது வெளியாகி உள்ளது. மேலும் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதிரடி ஆக்சன் காட்சிகளால் இந்த டீசர் நிரம்பியுள்ளது. இந்த சீரியஸில் தண்ணீரை மையமாக வைத்து மிஷின் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி தற்போது வெளியாகியுள்ள டீசரின் காட்சிகளும் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளன. தற்போது ரசிகர்கள் இந்த டீசரை கொண்டாடி வருகின்றனர்.

tom cruise mission impossible the final reckoning movie teaser


ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ்: அதிரடி ஆக்சன் ஹீரோவாக ஹாலிவுட்டில் மாஸ் காட்டி வரும் டாம் குரூஸ் நடிப்பில் அடுத்ததாக மிஷன் இம்பாசிபள் தி ஃபைனல் ரெக்கனிங் படம் உருவாகி வருகிறது. சர்வதேச அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகியுள்ள இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. மேலும் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மே மாதம் 23ம் தேதி இந்த படம் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிரடி ஆக்ஷன் களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் டீசர் படத்திற்கான முன்னோட்டமாக மிக பிரம்மாண்டமாக அமைந்துள்ளது.

மிஷன் இம்பாசிபிள் தி ஃபைனல் ரெக்கனிங் படம்: அதிரடி சாகசங்களையும் ஆக்ஷன்களையும் இந்த படத்தில் டாம் குரூஸ் நிகழ்த்தி காட்டியுள்ளார். கடல், பனிக்கட்டி என தண்ணீரை சுற்றியே இந்த டீசரின் பெரும்பாலான காட்சிகள் அமைந்துள்ளன. இதையொட்டி பார்க்கும்போது இந்த சீசனில் நீரை சுற்றியே மிஷன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த படத்தின் இந்த டீசரின் இசை மிகப் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. ரசிகர்களின் மிகப்பெரிய கொண்டாட்டங்களுக்கு உள்ளாகி வரும் மிஷன் இம்பாசிபிள் சீரிசில் இந்த படமும் சிறப்பாக இடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

tom cruise mission impossible the final reckoning movie teaser

இயக்குநர் கிறிஸ்டோபர் மெக்யூரி: கடந்த சீசனில் ஏஐ மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த நிலையில், இந்த சீசன் எட்டாவது பாகமாக உருவாகியுள்ளது. கடந்த சீசனை இயக்கிய கிறிஸ்டோபர் மெக்யூரி தற்போது மிஷன் இம்பாசிபிள் தி ஃபைனல் ரெகனிங் படத்தையும் இயக்கியுள்ளார். இந்த படமும் கடந்த சீசன்களை போலவே மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து சர்வதேச அளவில் மாஸ் வசூலை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீக்ரெட் ஏஜென்ட்டாக டாம் குரூஸ் நடித்து கடந்த 1996ம் ஆண்டு முதன் முதலில் மிஷன் இம்பாசிபிள் படம் வெளியானது. இந்த முதல் படமே மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்த நிலையில் அடுத்தடுத்து ஏழு பாகங்கள் வெளியாகி உள்ளன.

மாஸ் காட்டும் டீசர்: இவை அனைத்துமே சர்வதேச அளவில் ரசிகர்களை கவர்ந்து வரவேற்பை பெற்றுள்ளன. இந்த படத்தில் டாம் குரூஸின் கேரக்டர் ஈதன் ஹண்ட். 62 வயதிலும் இந்தப் படத்தில் இளம் வயது ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும்வகையில் டாம் குரூஸ் நடித்துள்ளார். படத்தின் முன்னோட்டமாக வெளியாகி உள்ள இந்த படத்தின் டீசரை தற்போது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சில மணி நேரங்களிலேயே பல மில்லியன் வியூஸ்களை இந்த டீசர் பெற்றுள்ளது. ரசிகர்கள் அடுத்தடுத்து கமெண்ட்களால் youtube பக்கத்தை நிரப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X