கொரோனா தடுப்பு மருந்துக்கான ஆராய்ச்சி.. சோதனைக்கு ரத்த தானம் செய்ய முன்வந்த பிரபல ஹாலிவுட் ஜோடி!
லாஸ் ஏஞ்சல்ஸ்: கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்க தங்களின் ரத்தத்தை சோதனைக்கு வழங்க பிரபல ஹாலிவும் ஜோடி முன்வந்துள்ளது.
பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹேங்ஸ். ஆஸ்கர் விருது வென்ற இவர், கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார்.
ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் பகுதிக்கு ஷுட்டிங்கிற்கு சென்றபோது, டாம் ஹேங்ஸ்க்கும் அவரது மனைவி ரீட்டா வில்சனுக்கும் காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் என கொரோனாவுக்கான அறிகுறிகள் தென்பட்டன.

மீண்ட ஹாலிவுட் ஜோடி
இதனை தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்ற அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் தனிமைப்பபடுத்தப்பட்டு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. 3 வாரங்களுக்கு பிறகு கொரோனாவில் இருந்து மீண்டனர் டாம் ஹேங்ஸ் மற்றும் அவரை மனைவி ரீட்டா வில்சன்.

ரத்த தானம்
பின்னர் மீண்டும் மார்ச் இறுதியில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ்க்கு திரும்பினர். இந்நிலையில் உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுப்பிடிக்கும் சோதனைக்கு தங்களின் ரத்தத்தை தானமாக வழங்க முன்வந்துள்ளனர் டாம் ஹேங்ஸ் மற்றும் ரீட்டா வில்சன் தம்பதி.

பிளாஸ்மா திரவம்
மேலும் பிளாஸ்மா சிகிச்சைக்கு உதவவும் அவர்கள் முன்வந்துள்ளனர். கொனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களின் பிளாஸ்மா திரவத்தை கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சீனா பிளாஸ்மா சிகிச்சை வழங்கி பலரை மீட்டது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

பலரும் பாராட்டு
கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுப்பிடிக்கும் பணியில் இந்தியா உட்பட பல நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் பிரபல ஹாலிவுட் ஜோடியான டாம் ஹேங்ஸ் மற்றும் ரீட்டா வில்சன் தம்பதி அதற்காக ரத்ததானம் வழங்க முன்வந்திருப்பது பலரின் பாராட்டையும் பெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











