வில் ஸ்மித் இப்படி செய்திருக்கக் கூடாது... சிறை தண்டனை கிடைக்குமா ?

லாஸ் ஏஞ்சல்ஸ் : சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்ற வில் ஸ்மித், நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்கை விழா மேடையில் அறைந்த சம்பவம் பெரும் புயலை கிளப்பி உள்ளது.

வில் ஸ்மித் செய்தது சரியா... தவறா என பட்டிமன்றமே வைக்கும் அளவுக்கு இணையத்தில் விவாதங்கள் எழுந்தன.

ஒரு சிலர் பொது மேடையில் ஸ்மித் உணர்ச்சிப்பட்டிருக்கக்கூடாது என்றும், இதற்காக அவருக்கு நிச்சயம் சிறை தண்டனை கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஆஸ்கர் விழா

ஆஸ்கர் விழா

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் ஹாலிவுட் பவுல்வார்ட்டில் உள்ள டால்பி திரையரங்கத்தில் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இந்த ஆண்டு வழக்கமான பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது.

கிண்டல் பேச்சு

கிண்டல் பேச்சு

கிங் ரிச்சர்ட் படத்தில் நடித்ததற்காக நடிகர் வில் ஸ்மித், சிறந்த நடிகருக்கான விருதைப் பெறுவதற்காக இந்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்கு வந்திருந்தார். அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நடிகர் கிறிஸ் ராக் நகைச்சுவையாக பேசுகிறேன் என்று, வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட்டின் தலை முடி குறித்து எக்குத்தப்பாக பேசினார், இதை கேட்டுக்கொண்டிருந்த ஆடியன்ஸ் அனைவரும் ஒட்டுமொத்தமாக சிரித்துவிட்டனர்.

ஓங்கி ஒரே அறை

ஓங்கி ஒரே அறை

மனைவி குறித்து கிண்டலடித்ததால் கடுப்பான ஸ்மித், திடீரென்று மேடைக்கு வந்து கிறிஸ் ராக்கை ஓங்கி அறை விட்டு விட்டு மீண்டும் தனது மனைவியுடன் அமர்ந்துவிட்டு, என் மனைவியின் பெயர் இனி உன் வாயில் வரக்கூடாது என்று ஆத்திரத்தில் கத்தினார். இதனால், அந்த இடமே என்ன நடக்கிறது என்று புரியாமல் அனைவரும் அமைதியாகிவிட்டனர்.

மன்னிப்பு கேட்டார்

மன்னிப்பு கேட்டார்

இதையடுத்து, நடிகர் வில் ஸ்மித், தான் சற்று உணர்ச்சிவசப்பட்டு விட்டுவிட்டதாகவும், இந்த செயலால் நான் பெரும் சங்கடம் அடைந்திருப்பதாகவும் கூறினார். விழாவில் நகைச்சுவை என்பது இயல்பானது தான் என்றாலும், என்னுடைய மனைவி குறித்து ராக் கேலி செய்ததால் உணர்ச்சவசப்பட்டுவிட்தாகவும், இதற்காக கிறிஸ் ராக்கிடமும், நிகழ்ச்சி அமைப்பாளர்களிடமும் மன்னிப்பு கோருகிறேன் என்று வில் ஸ்மித் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Recommended Video

Will Smith Chris Rockஐ Oscar Stage-ல் அறைந்தது ஏன்? | Filmibeat Tamil
சிறை தண்டனை கிடைக்குமா?

சிறை தண்டனை கிடைக்குமா?

இந்நிலையில், நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்கிடம் இச்சம்பவம் குறித்து புகார் கொடுக்கிறீர்களா ? என லாஸ்ஏஞ்சல்ஸ் போலீசார் கேட்டுள்ளார். ஆனால் கிறிஸ் ராக் பதில் எதுவும் தெரிவிக்காமல் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. கிறிஸ் ராக் புகார் கொடுத்தால், வில் ஸ்மித்துக்கு 6 மாதம் சிறைத் தண்டனையும் ரூ.76 லட்சம் அபராதமும் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அவர் புகார் கொடுக்க இன்னும் 6 மாத காலம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X