கோமாவில் ஹாலிவுட் நடிகை..கைவிரித்த மருத்துவமனை..கவலையில் ரசிகர்கள்!

அமெரிக்கா : கடந்த வாரம் விபத்தில் சிக்கிய ஹாலிவுட் நடிகை அன்னே ஹெச் உயிர்பிழைப்பது கடினம் என தகவல் வெளியாகி உள்ளதால் அவரது ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

மது அருந்து விட்டு அதிவேகமாக வாகனம் ஓட்டியது தான் விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தீக்காயத்துடன் மீட்கப்பட்ட அன்னே ஹெச் உயிருக்கு போராடுவது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடிகை அன்னே ஹெச்

நடிகை அன்னே ஹெச்

ஹாலிவுட் நடிகை அன்னே ஹெச் கடந்த வாரம் தனது மினி கூப்பர் காரில் லாஸ் ஏஞ்சலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் மோதி விபத்துக்குள்ளானது. கார் மோதிய வேகத்தில் கார் கடுமையாக தீப்பிடித்து எரிந்தது. ததகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் அவரை மீண்டு வெஸ்ட் ஹில்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உயிர் பிழைக்க வாய்ப்பில்லை

உயிர் பிழைக்க வாய்ப்பில்லை

இந்நிலையில், நடிகை அன்னே ஹெச் குடும்பத்தினர் அளித்துள்ள பேட்டியில், அன்னே ஹெச் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்றும், அவருக்கு முளை பகுதியில் கடுமையாக காயமடைந்துள்ளதால், தற்போது அவர் கோமா நிலையில் இருப்பதாக தெரிவித்தனர். அவரின் உடல் உறுப்பு தானம் செய்வது பற்றி ஆலோசனை நடந்து வருவதாகவும் அன்னே குணமடைய பிரார்த்தனை செய்த அனைவருக்கும், அவரது ரசிகர்களுக்கும் மருத்துவர்கள் அற்புதமான செவிலியர்களுக்கு நன்றி கூற விரும்புகிறோம் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.

பல திரைப்படங்களில்

பல திரைப்படங்களில்

53 வயதான அன்னே ஹெச் இரண்டு குழந்தைகளுக்கு தாயான இவர் டோனி பிராஸ்கோ, சிடார் ரேபிட்ஸ் மற்றும் 1998 ஆம் ஆண்டு சைக்கோ ரீமேக் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், ஐ நோ வாட் யூ டிட் லாஸ்ட் சம்மர், ப்ரோசாக் நேஷன், வால்கானோ அண்ட் சிக்ஸ் டேஸ், செவன் நைட்ஸ் திரைப்படத்தில் ஹாரிசன் ஃபோர்டுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

எம்மி விருது

எம்மி விருது

1991 ஆம் ஆண்டு டேடைம் எம்மி விருதுகளில், மற்றொரு உலகில் அவரது நடிப்பிற்காக ஒரு நாடகத் தொடரில் சிறந்த இளம் நடிகையாக விருதுக்கு இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டது. படங்களில் மட்டுமில்லாமல் தொலைக்காட்சிகளிலும், ஆலி மெக்பீல், சேவ் மீ, ஆஃப்டர்மாத், ஹங், சிகாகோ பி.டி, டான்சிங் வித் தி ஸ்டார்ஸிலும் ஹெச் நடித்துள்ளார். மார்ச் மாதம் கலிபோர்னியாவில் நடந்த டைரக்டர்ஸ் கில்ட் ஆஃப் அமெரிக்கா விருது வழங்கும் விழாவில் அன்னே ஹெச் கலந்து கொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X