Cameron Diaz: 51 வயதில் கேமரூன் டயசுக்கு 2வது குழந்தை.. குவியும் வாழ்த்துக்கள்!
வாஷிங்டன்: ஹாலிவுட்டில் தி ஹாலிடே, மாஸ்க், சார்லி ஏஞ்சல்ஸ், நைட் அண்ட் டே போன்ற பல வெற்றிப்படங்களில் இணைந்து நடித்து சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக இருந்தவர் கேமரூன் டயஸ். இவர் கடந்த 2015ம் ஆண்டில் பென்ஜி மேடன் என்ற இசைக்கலைஞரை திருமணம் செய்துக் கொண்டார். இவர் கேமரூனை காட்டிலும் 6 வயது சிறியவர். இந்த தம்பதிக்கு கடந்த 2019ம் ஆண்டில் ராடிக்ஸ் என்ற பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய இரண்டாவது கர்ப்பத்தையும் கேமரூன் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது கேமரூன் மற்றும் பென்ஜி மேடன் தம்பதிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்தக் குழந்தைப்பிறப்பை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார் கேமரூன். தொடர்ந்து தாங்கள் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் பெருமை தெரிவித்துள்ளார். அவருக்கு தற்போது 51 வயதாகும் சூழலில் இந்த குழந்தை பிறப்பை அவர்களது குடும்பத்தினர் கொண்டாடி வருகின்றனர். அவர்களின் ரசிகர்களும் அவரது குழந்தை பிறப்பை கொண்டாடி வருகின்றனர். சமூக வலைதளங்களில் கேமரூனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

நடிகை கேமரூன் டயஸ்: நடிகை கேமரூன் டயஸ் சர்வதேச அளவில் மிகச்சிறப்பான நடிகையாக வலம்வந்தவர். ஹாலிவுட்டில், மாஸ்க், தி ஹாலிடே, சார்லி ஏஞ்சல்ஸ், நைட் அண்ட் டே போன்ற வெற்றிப்படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை வசம்செய்தவர். இவரது அழகுடன் கூடிய கவர்ச்சி மற்றும் இயல்பான நடிப்பு இவருக்கு சர்வதேச அளவில் ரசிகர்களை உருவாக்கியுள்ளது. கடந்த 2015ம் ஆண்டில் குட் சார்லோட் என்ற இசைக்குழுவின் உறுப்பினர் மென்ஜி மேடனை டேட்டிங் செய்து மணந்துக் கொண்டார். மேடர், டயசை காட்டிலும் 6 வயது சிறியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களது காதல் வாழ்க்கைக்கு சாட்சியாக கடந்த 2019ம் ஆண்டில் முதல் குழந்தை பிறந்தது.
பெண் குழந்தை: இதையடுத்து ராடிக்ஸ் என்று அந்தப் பெண் குழந்தை குறித்து இன்ஸ்டாகிராமில் அறிவித்த கேமரூன் டயஸ், அதிகமான விவரங்களை பதிவிடவில்லை. தங்களது குடும்பத்தினரின் சுதந்திரத்தை பாதுகாக்க விரும்புவதாகவும் அதனால் புகைப்படங்கள் மற்றும் மற்ற விவரங்களை அறிவிக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் 4 ஆண்டுகள் கழித்து தன்னுடைய 51வது வயதில் கேமரூன் தற்போது 2வது குழந்தைக்கு தாயாகியுள்ளார். தற்போது அவர் ஆண் குழந்தைக்கு தாயாகியுள்ளார். குழந்தைக்கு கார்டினல் மேடன் என்று பெயரிட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

இரண்டாவது குழந்தை: தொடர்ந்து கேமரூன் மற்றும் மேடன் இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தை பிறப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். கார்டினல் மிகவும் அற்புதமானவர் என்றும் அவர் இங்கு வந்ததில் தாங்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த குழந்தை பிறந்ததற்கு தாங்கள் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் மற்றும் நன்றியுள்ளவர்கள் என்றும் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர். மேலும் ஒரு சிறிய பறவை என்னிடம் கிசுகிசுத்தது என்றும் கார்டினல் உண்மையில் அழகானவர் என்றும் கூறியுள்ளனர். குழந்தையின் புகைப்படங்களை அவர்கள் பகிரவில்லை.
குவியும் வாழ்த்துக்கள்: கேமரூன் டயஸ் மற்றும் மென்ஜி மேடன் இருவரும் தங்களது இன்ஸ்டாகிராமில் குழந்தை குறித்த அறிவிப்பை மேற்கொண்டுள்ளனர். எந்தவிதமான புகைப்படமும் இல்லாமல் ஒரு ஓவியம் மூலம் இந்த மகிழ்ச்சியான விஷயத்தை அவர்கள் பகிர்ந்துள்ளனர். இதையடுத்து லட்சக்கணக்கான ரசிகர்கள் இவர்கள் இருவருக்கும் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். மேலும் வயதான காலத்தில் குழந்தைக்கு தாயாகியுள்ள கேமரூனுக்கு ஆலோசனைகளையும் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











