ரோட் தீவில் சுற்றமும் நட்பும் சூழ காதலரை மணந்த ஹாலிவுட் நடிகை! கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி!
சென்னை: ஹாலிவுட் நடிகை ஜெனிஃபர் லாரன்ஸ் தனது காதலரை ஒருவழியாக கைப்பிடித்துள்ளார்.
29 வயதான ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லாரன்ஸ் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் சில்வர் லைனிங்ஸ் பிளேபுக் என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது உட்பட ஏராளமான விருதுகளை குவித்துள்ளார்.
இவர் குக் மரோனி என்பவரை காதலித்து வந்தார். இருவரும் ஏற்கனவே ரகசிய திருமணம் செய்துகொண்டதாக பல முறை தகவல் பரவியது.

கோலாகல திருமணம்
ஆனால் அதுகுறித்து காதல் ஜோடி வாய் திறக்காமல் இருந்து வந்தது. இந்நிலையில் அமெரிக்காவின் ரோட் தீவில் உள்ள நியூ போர்ட் நகரில் நேற்று கோலகலமாக நடைபெற்றது.

150 பேர் மட்டும்
இதில் இருவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள என 150 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த திருமணத்தில் ஹாலிவுட் நடிகர் நடிகைகள் அடிலே, கேமரூன் டையாஸ், எம்மா ஸ்டோன், சியன்னா மில்லர், கிரிஸ் ஜென்னர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

விருந்து பார்ட்டி
திருமணத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை இரவு முதலே ரோட்ஸ் தீவின் ஆடம்பரமான பெல்கோர்ட் கோட்டை விழாக்கோலம் பூண்டுவிட்டது. இரவு முழுவதும் விருந்து பார்ட்டி என களைக்கட்டியது.

தெருக்களில் மக்கள்
மணமக்கள் கருப்பு நிற எஸ்யூவி மற்றும் மெர்சிடெஸ் பென்ஸ் ஆகிய கார்களில் பெல்கோர்ட் கோட்டைக்கு வந்தனர். ஆஸ்கர் வின்னர் ஜெனிஃபரை காண தெருக்களில் ஏராளமான பொதுமக்கள் குவிந்திருந்தனர்.

அதிகாரப்பூர்வ திருமணம்
இதனிடையே திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் பெல்கோர்ட் கோட்டைக்குள் ஆம்புலன்ஸ் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை நல்ல படியாக இருவரும் அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்துகொண்டனர்.

வைரல் போட்டோக்கள்
புது திருமண தம்பதிகளுக்கு ரசிகப் பெருமக்களும் ஹாலிவுட் திரை நட்சத்திரங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவர்களின் திருமண போட்டோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











