கோகைனுடன் டிரைவிங்-பாரிஸ் ஹில்டன் கைது!

நேற்று முன்தினம் இரவு அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் காரில் சென்று கொண்டிருந்தார் பாரிஸ். காரை அவர் ஓட்டவில்லை, அவரது நண்பர் ஓட்டினார்.
காரை நிறுத்திய போலீஸார் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரிலிருந்து மரிஜூனாவா புகை வந்தது. இதையடுத்து தீவிர சோதனை நடத்தினர். அப்போது பாரிஸிடமிருந்து கோகைன் வாசனை வந்தது.
மேலும் காரிலும் கோகைன் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பாரிஸ் கைது செய்யப்பட்டார். தொடர் விசாரணையில் அந்த கோகைன் இருந்த பை பாரிஸுக்குச் சொந்தமானதல்ல என்று தெரிய வந்ததைத் தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியின்போது மாரிஜுவானா போதை பொருள் பயன்படுத்தியதாக பாரிஸ் ஹில்டன் கைது செய்யப்பட்டார். அப்போதும் விசாரணைக்கு பின் விடுதலை செய்யப்பட்டார்.
Comments
actress paris hilton குடிபோதையில் கார் டிரைவிங் பாரிஸ் ஹில்டன் பாரிஸ் ஹில்டன் கைது ஹாலிவுட் drunkan driving hollywood


Click it and Unblock the Notifications