3வது கணவர் இருக்கும் போதே நடிகருக்கு 2நிமிடம் லிப்கிஸ் கொடுத்த நடிகை.. கணவர் செய்த தரமான சம்பவம்!

சென்னை: ஹாலிவுட்டின் பிரபலமான நடிகையான ஸ்கார்லெட் ஜோஹன்சன், 2019 கால கட்டத்தில் உலகின் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்தார், மேலும், இவர் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட பிரபலங்களின் வரிசையில் இவரது பெயர் பல முறை இடம் பிடித்தது. இவரது படங்கள் உலகளவில் வசூலை அள்ளின. தற்போது 40 வயதை எட்டி இருக்கும் இவர், தனது மூன்றாது கணவர் முன், சக நடிகரை தொடர்ந்து உதட்டில் முத்தம் கொடுத்து சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

அகாதமி விருதுகள், கோல்டன் குளோப் விருதுகளை பெற்ற ஸ்கார்லெட் ஜோஹன்சன் கடந்த 2008 ஆம் ஆண்டு ரியான் ரெனால்ட்ஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பின் 2011ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தார். இதன்பின், ரோமன் டையூரிங்க் என்ற பத்திரிக்கையாளரை திருமணம் செய்து கொண்டார். அவருடன், மூன்று ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த இவர் அவரையும் விவாகரத்து செய்து பிரிந்தார். இதையடுத்து, 2020 ஆம் ஆண்டு Colin Jost என்பவரை மூன்றாவது திருமணம் செய்துகொண்டார். ஸ்கார்லெட் ஜோஹன்சன் நடிகைக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

hollywood actress kiss
Photo Credit:

பொது மேடையில் முத்தம்: இந்நிலையில், அண்மையில் ஜுராசிக் வேர்ல்ட் ரீபிர்த் படத்தில் தன்னுடைய இணைந்த நடித்த ஜோனாதன் பைலி என்பவருடன் நியூயார்க் நகரில் நடந்த பிரீமியரில் கலந்து கொண்டார். ஒட்டுமொத்த மீடியாவும் கூடி இருந்த அந்த இடத்தில் நடிகை ஸ்கார்லெட் ஜோஹன்சன், தன்னுடன் சக நடிகரான ஜோனாதன் பைலிக்கு தொடர்ந்து இரண்டு நிமிடம் உதட்டில் முத்தம் கொடுத்துக்கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கிரெய்க் மெல்வினு அவர்களின் முத்தம் நட்பானது என சொல்லி சமாளித்தார். அந்த நிகழ்ச்சியில் அவரது மூன்றாவது கணவரும் கலந்து கொண்டார். கணவரின் என் எதிரே நடிகை அவ்வாறு நடந்து கொண்டது சர்ச்சையாக பேசப்பட்டது.

இதுல என்ன தப்பு: இந்நிலையில், நடிகை ஸ்கார்லெட் ஜோஹன்சன் மூன்றாவது கணவர், Colin Jost எண்டர்டெயின்மென்ட் டுநைட் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், தனது மனைவி முத்தம் கொடுத்தது பற்றி பேசி இருந்தார். அதில், ஒரு படத்தில் சேர்ந்து நடிக்கும் போது, இருவருக்கும் இடையே இயல்பாகவே பாசம் வந்துவிடும். நண்பருக்கு வணக்கம் சொல்லும் விதமாகத்தான் முத்தம் கொடுக்கப்படுகிறது. ஆனால், மக்கள் அதை பெரிதுபடுத்துகிறார்கள். ஜொனாதன் ஒரு வெளிப்படையான ஓரினச்சேர்க்கையாளர். அவர் எனக்கு பெரிய அச்சுறுத்தலாகத் தெரியவில்லை அது ஒரு இயல்பான நடந்த விஷயம் அதை பெரிதுப்படுத்த வேண்டாம் என்றார். இப்படி ஒரு பதிலை எதிர்பார்க்காத இணையவாசிகள், நல்ல கணவர் என அவரை பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X