அவதார் டைரக்டருக்கும் அமெரிக்க அதிபருக்கும் அப்படி என்னதான் பிரச்னை? விட்டால் ஒன் டூ ஒன் நிற்பாங்கபோல

அமெரிக்கா: அமெரிக்காவின் அதிபராக உள்ள டிரம்ப்பின் முகத்தைப் பார்க்கவே பிடிக்கவில்லை. செய்தித் தாள்களில் தினமும் அவரது முகத்தை பார்ப்பது என்பது ஒரு கார் விபத்தை திரும்பத் திரும்ப பார்ப்பது போல் உள்ளது என உலகப் புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார். மேலும் தான் அமெரிக்காவை விட்டு வெளியேறுவதாகவும் தெரிவித்துள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன். இவரது சினிமாக்களைப் பார்த்து பல நாடுகளின் சினிமா உருவாக்கங்களின் தன்மை மாறியுள்ளது. அந்த அளவிற்கு ஜேம்ஸ் கேமரூன் தனித்துவமான சினிமா உருவாக்கும் வல்லமை கொண்டவராக உள்ளார். எத்தனை ஆயிரம் கோடிகள் பட்ஜெட் அவர் கூறினாலும் அதற்கு கொஞ்சமும் மறுப்பு தெரிவிக்காமல், கமிட் ஆக ஹாலிவுட்டில் பல புரடெக்‌ஷன் கம்பெனிகள் தயாராக உள்ளது. காரணம் உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர்கள் உள்ளார்கள் என்பதுதான்.

James Cameron Hollywood Avatar

ஜேம்ஸ் கேமரூன்: மேலும் இவரது படங்கள் ஏதோ மற்ற இயக்குநர்களைப் போல சீசனுக்கு மட்டும் பேசப்படுவது கிடையாது. இவரது சினிமாக்கள் காலத்திற்கும் நின்று விளையாடும் சினிமாக்கள். டைட்டானிக் , அவதார், அவதார் 2 போன்ற படங்களைக் கூறலாம். இப்போது அவதார் 3 படத்திற்கான வேலைகளும் நடைபெற்று வருகிறது. இப்படியான நிலையில், அவர் தெரிவித்துள்ள கருத்து அமெரிக்காவைச் சார்ந்தவர்களை, ஹாலிவுட் வட்டாரங்களைச் சார்ந்தவர்களை மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

James Cameron Hollywood Avatar

டிரம்ப்: அதாவது, " அமெரிக்காவில் நான் பாதுகாப்பாக உணர்கிறேனா இல்லையா என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியவில்லை. ஆனால் தினமும் நாளிதழ் படிக்கும்போது, முதல் பக்கத்தில் அதிபராக உள்ள டிரம்ப்பின் முகத்தைப் பார்க்க முடியவில்லை. அது வெறுப்பூட்டும் வகையில் உள்ளது. அவரது முகத்தை தினமும் முதல் பக்கத்தில் நாளிதழில் பார்ப்பது என்பது, ஒரு கார் விபத்தை திரும்பத் திரும்ப பார்ப்பது போல் உள்ளது. எனவே நான் அமெரிக்காவை விட்டு வெளியேறி, நியூசிலாந்திற்கு குடிபெயரலாம் என இருக்கிறேன்.

James Cameron Hollywood Avatar

நியூசிலாந்து: நியூசிலாந்தில் உள்ள செய்தி நிறுவனங்களும் டிரம்ப் குறித்த செய்திகளைப் போடுவார்கள் என எனக்குத் தெரியும். ஆனால் குறைந்தபட்சம் அவர்கள் மூன்றாவது பக்கத்திலாவது அதை செய்தியாக்குவார்கள், முதல் பக்கத்தில் செய்தியாக்க மாட்டார்கள். அப்படியாவது டிரம்ப்பின் முகத்தை நான் தினமும் காலையில் பார்க்காமல் இருப்பேன்" எனக் கூறினார். இவரது பேச்சு பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது. மேலும், ஜேம்ஸ் கேமரூனிடம் ஏற்கனவே நியூசிலாந்தில் குடியேறுவதற்கான அனைத்து ஆவணங்களும் உள்ளது என கூறப்படுகிறது.

James Cameron Hollywood Avatar
James Cameron Hollywood Avatar

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X