ஜூலிக்கும், பிட்டுக்கும் இந்து முறைப்படி திருமணம்?: மகிழ்ச்சியில் இந்துக்கள்

யோகா, இந்து முறைப்படி திருமணம், இந்து மதத்தை தழுவுதல் என்று இந்துத்துவ நடைமுறைகள் ஹாலிவுட்டில் பிரபலம் அடைந்து வருகிறது. இந்த வரிசையில் ஹாலிவுட்டின் கனவுக் கன்னி ஏஞ்செலினா ஜூலியும், அவரது கணவர் பிராட் பிட்டும் இந்து முறைப்படி ஒரு திருமணம் செய்யவுள்ளனராம்.
இதை இந்துக்கள் வரவேற்றுள்ளனர். திருமணச் சடங்குகளை சித்தா குரு என்பவர் செய்யவுள்ளார். புத்தாண்டில் ஜூலியும், பிட்டும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும், ராஜஸ்தான் மாநிலம் பிகானீரைச் சேர்ந்த குரு ராம் லால்ஜி சியாக் திருமண் சடங்குகளைச் செய்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் ஜூலியும், பிட்டும், அவர்களுடைய 5 ஆண்டு உறவை பலப்படுத்த லால்ஜி சியாக், சித்த யோகா கற்றுக் கொடுப்பதாகவும் தெரிகிறது. அவர்களுக்கு ஒரு மந்திரத்தை கற்றுக் கொடுத்து, அதை தினமும் காலையிலும், மாலையிலும் கூறுமாறு அறிவுறுத்தியுள்ளாராம் இந்த சியாக்.
இருப்பினும் இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்வது பற்றி ஜூலியும், பிட்டும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.


Click it and Unblock the Notifications











