twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சாம்பியன், லஸ்ட் ஆப் லைஃப் படங்களில் நடித்தவர்.. பழம்பெரும் ஹாலிவுட் லெஜண்ட் கிரிக் டக்ளஸ் காலமானார்

    By
    |

    லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் நடிகர் கிரிக் டக்ளஸ் நேற்று காலமானார். அவருக்கு வயது 103.

    1950 மற்றும் 60 களில் ஹாலிவுட் திரைப்படங்களில் கலக்கியர் கிரிக் டக்ளஸ். தொடர்ந்து படங்களிலும் டிவி சீரியல்களிலும் நடித்துவந்தார்.

    நாடக நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், எழுத்தாளர் என பல முகங்கள் கொண்ட கிரிக் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

    சாம்பியன்

    சாம்பியன்

    அவர் நடித்ததில், அவுட் ஆப் த பாஸ்ட் (1947), சாம்பியன் (1949), த பேட் அண்ட் த பியூட்டிபுல் (1952), லஸ்ட் ஆப் லைஃப், பாத்ஸ் ஆப் குளோரி, த வைக்கிங், செவன் டேஸ் இன் மே, சேட்டர்ன் 3, டஃப் கய்ஸ் உட்பட பல படங்கள் புகழ்பெற்றவை. ஸ்கேல்வாக் என்ற படத்தை இயக்கியுள்ளார். த பிரதர்ஹூட் உட்பட சில படங்களை தயாரித்தும் உள்ளார்.

    சிறந்த நடிகர்

    சிறந்த நடிகர்

    ஏராளமான டிவி தொடர்களிலும் நடித்துள்ள இவர், கடைசியாக 2008 ஆம் ஆண்டு வெளியான எம்பயர் ஸ்டேட் பில்டிங் மர்டர்ஸ் என்ற தொடரில் நடித்திருந்தார். அமெரிக்க சினிமா வரலாற்றில் சிறந்த நடிகர் என அமெரிக்க பிலிம் இன்ஸ்டிடியூட் வரிசை படுத்தியுள்ள பட்டியலில் 17 வது இடத்தில் இருக்கிறார் இவர்.

    வாழ்நாள் சாதனை

    வாழ்நாள் சாதனை

    சிறந்த நடிகர் பட்டியலில் இருந்தாலும் நடிப்புக்காக இவருக்கு ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை. இவர் நடித்த சில படங்கள் விருது பெற்றிருந்தாலும் இவருக்கு கிடைக்கவில்லை. 50 வருடங்களாக தொடர்ந்து சினிமாவில் நடித்தபின், வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கர் விருது அவருக்கு வழங்கப்பட்டது.

    திரைபிரபலங்கள்

    திரைபிரபலங்கள்

    கலிபோர்னியாவில் உள்ள பிரேவரில் ஹில்ஸ் பகுதியில் தனது மனைவி மற்றும் மகன்களுடன் வசித்துவந்த இவர், நேற்று உயிரிழந்தார். இதை அவரது மூத்த மகனும் நடிகருமான மைக்கேல் டக்ளஸ் உறுதிப்படுத்தியுள்ளார். கிரிக் டக்ளஸ் மறைவுக்கு ஹாலிவுட் திரைபிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    மைக்கேல் டக்ளஸ்

    மைக்கேல் டக்ளஸ்

    மறைந்த கிரிக் டக்ளஸுக்கு இரண்டு மனைவிகள். நான்கு மகன்கள். மூத்த மகன் மைக்கேல் டக்ளஸ் பிரபல நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். வால் ஸ்டிரீட் (1987) படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ஆஸ்கர் விருதையும் மைக்கேல் டக்ளஸ் பெற்றுள்ளார். நடிப்புக்காக கோல்டன் குளோப், பாப்டா விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளை இவர் பெற்றுள்ளார்.

    English summary
    legend actor Kirk Douglas, a Star of Hollywood’s Golden Age, Dies at 103
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X