27 வது மாடியில் இருந்து குதித்து பிரபல சினிமா தயாரிப்பாளர் தற்கொலை.. திரையுலகம் அதிர்ச்சி!
லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல தயாரிப்பாளர் 27 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர், ஸ்டீவ் பிங் (steve bing). பல படங்களுக்கு பைனான்ஸ் செய்துள்ளார்.
த போலார் எக்ஸ்பிரஸ், பியோவுல்ப் உட்பட சில படங்களை தயாரித்துள்ளார்.

அடுக்குமாடி குடியிருப்பு
கங்காரூ ஜாக் என்ற படத்துக்கு இணை திரைக்கதை ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். அரசியலிலும், பங்கேற்று வந்த இவர், அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் நெருங்கிய நண்பர். இவர், தான் வசித்துவந்த அடுக்குமாடி குடியிருப்பின் 27 வது மாடியில் இருந்து கீழே குதித்து, கடந்த சில நாட்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்டார். இதை போலீசார் உறுதிப்படுத்தி உள்ளனர்.

மன அழுத்தம்
கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அதனால் இந்த முடிவை அவர் எடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஸ்டீவ் பிங்கின் திடீர் தற்கொலை, ஹாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டீவ் பிங்கின் முன்னாள் காதலியான ஹாலிவுட் நடிகை எலிசபெத் ஹர்லி, அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவருடனான நினைவுகள் முக்கியமானவை என்று கூறியுள்ளார்.

இனிமை நினைவுகள்
அதில், அவர் நம்மோடு இல்லை என்பதை அறிந்து வருத்தத்தில் இருக்கிறேன். நாங்கள் ஒன்றாக இருந்த நேரம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. சில காலங்கள் கடினமாக இருந்தபோதும் அந்த கனிவான, இனிமையான நினைவுகள் முக்கியமானவை. கடந்த வருடம் நாங்கள் மீண்டும் நெருக்கமாகி இருந்தோம். இந்நிலையில் அவரது மறைவு பேரழிவு செய்தியாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

பில் கிளின்டன்
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன் தெரிவித்துள்ள இரங்கலில், நான் ஸ்டீவ் பிங்கை அதிகமாக நேசித்தேன். அவர் சிறந்த மனதைக் கொண்டவர். அவர் மக்களுக்காக எதையும் செய்யத் தயாராக இருந்தார். அவரையும் அவரது உற்சாகத்தையும் இழந்துவிட்டேன் என்று தெரிவித்துள்ளார். இன்னும் சில ஹாலிவுட் பிரபலங்கள் அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications