கொரோனா உறுதி.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல சூப்பர் ஸ்டார் நடிகர்.. வெளியானது தகவல்!

By

லாஸ் ஏஞ்சல்ஸ்: கொரோனா காரணமாக பிரபல சூப்பர் ஸ்டார் நடிகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி இப்போது தெரியவந்துள்ளது.

Recommended Video

SINGER VELMURUGAN | நம்ம மக்கள் நல்ல மனசுக்கு எதுவும் ஆகாது | V-CONNECT | FILMIBEAT TAMIL

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிரட்டி வருகிறது. இதன் தாக்கம் தீவிரமாகி வருகிறது.

இதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் கடும் முயற்சி எடுத்து வருகின்றன. இந்த வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

உயர்ந்து வருகிறது

உயர்ந்து வருகிறது

உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. தினமும் இதனால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது. லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டும் பாதிக்கப்படுபவர்கள் அதிகரித்து வருகின்றனர். இதைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் கடும் முயற்சி எடுத்து வருகின்றன.

ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய்

இந்நிலையில் இந்த கொரோனா தொற்று பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் உட்பட பலருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டது. நடிகை சுமலதா, சின்னத்திரை நடிகை நவ்யா ஸ்வாமி உட்பட சில நடிகர், நடிகைகளும் இந்த தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டனர். சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வருகின்றனர்.

ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்

ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்

இதற்கிடையே, பிரபல ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் மெல் கிப்சனும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என வலம் வரும் மெல்கிப்சனுக்கு கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்படது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு வாரம் தங்கி இருந்து அங்கு சிகிச்சை பெற்றுள்ளார். அது இப்போது தெரிய வந்துள்ளது.

ஆஸ்கர் விருது

ஆஸ்கர் விருது

அவருக்குப் பலமுறை பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை அவருக்கு வேண்டியவர்கள் தெரிவித்துள்ளனர். மெல்கிப்சன் 'பிரேவ் ஹார்ட்' படத்துக்காகச் சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதை வென்றவர். லெதல் வெப்பன், த மேன் வித்தவுட் எ ஃபேஸ், ரான்சம், த பேட்ரியாட் உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். பேசன் ஆப் த கிறிஸ்ட், அபோகலிப்டோ, பிரேவ் ஹார்ட் உட்பட பல படங்களை இயக்கியும் உள்ளார்.

நடிகர் டாம் ஹாங்ஸ்

நடிகர் டாம் ஹாங்ஸ்

மெல் கிப்சனுக்கு முன் மேலும் சில ஹாலிவுட் நடிகர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். டாம் ஹாங்ஸ், குவான்டம் ஆல் சோலஸ் நடிகை ஓலங்கா குரிலெங்கோ, ஜாக்சன் பிரான் உட்பட சிலர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் மீண்டுள்ளனர். பிராட்வே நடிகர் நிக் கார்டரோ உட்பட ஹாலிவுட் பிரபலங்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X