அந்த மாதிரி காட்சிகள் இனி கிராபிக்ஸில் தானாம்.. ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனங்கள் அதிரடி!

லாஸ் ஏஞ்சல்ஸ்: கொரோனா வைரஸ் உலகையே ஆட்டி படைத்து வரும் நிலையில், ஹாலிவுட் இனிமேல் செக்ஸ் காட்சிகளை சிஜி தொழில்நுட்பத்தின் உதவியுடன் எடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மனிதரால் மனிதருக்கு பரவும் கொடிய நோயாக கொரோனா வைரஸ் அறியப்பட்டு வரும் நிலையில், சமூக விலகலை உலகமே கடைபிடிக்க வேண்டிய புதிய நார்மல் நிலை உருவாகி இருக்கிறது.

ஹாலிவுட் முதல் அனைத்து சினிமா துறைகளும் கொரோனாவுக்கு பின்னர், அந்த மாதிரி காட்சிகளை எப்படி படமாக்குவது என்கிற குழப்பத்தில் ஆழ்ந்து இருக்கின்றன.

பச்சைக் கொடி

பச்சைக் கொடி

கலிபோர்னியாவில் வரும் ஜூன் 12ம் தேதி முதல் ஹாலிவுட் பட ஷூட்டிங்கை நடத்தலாம் என கவர்னர் கேவின் நியூசம் பச்சைக் கொடி காட்டியுள்ளார். ஆனால், சமூக இடைவெளியை கடைபிடித்தல், மற்றும் கொரோனா பரவலை தடுக்கும் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் திரைப்படத் துறையினர் எடுக்க வேண்டும் என்றும் கட்டளையிடப்பட்டு இருக்கிறது.

அந்த மாதிரி காட்சிகள்

அந்த மாதிரி காட்சிகள்

ஹாலிவுட் திரைப்படங்கள் என்றாலே ஆபாச காட்சிகளுக்கும், நிர்வாண காட்சிகளுக்கும் பஞ்சமே இருக்காது என்பது உலகமே அறிந்தது. ஆனால், கொரோனாவுக்கு பின்னர், நடிகர்கள் அதுபோன்ற காட்சிகளில் பழையபடி நடிப்பார்களா என்ற கேள்வி எழுந்து வருகிறது. இந்நிலையில், அதுகுறித்த ஆலோசனையில் ஹாலிவுட் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கிராபிக்ஸில்

கிராபிக்ஸில்

சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், உடலுறவு காட்சிகளில் இனி நடிகர், நடிகையரை நேரடியாக ஈடுபடுத்தாமல், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உதவியுடன் அதுபோன்ற காட்சிகளை படமாக்கும் முடிவுக்கு பல ஹாலிவுட் தயாரிப்பாளர்கள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முத்த காட்சிகளையும் சிஜியில் தான் எடுக்கப் போகிறார்களாம்.

டூப் போட்டு

டூப் போட்டு

ஏற்கனவே பல பிரபல நடிகைகள் நிர்வாணமாக தாங்கள் நடிக்கும் காட்சிகளுக்கு பாடி டபுள் என டூப்பை பயன்படுத்தி வரும் நிலையில், தற்போது, பாடி டபுளுக்கு பதிலாக அந்த காட்சி கம்ப்யூட்டர் கிராபிக்ஸில் படமாக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், அது போன்ற காட்சிகளை இயக்குநர்கள் இனி ஸ்க்ரிப்ட் எழுதும் போதே அதிகளவு தவிர்க்கவும் வாய்ப்புகள் அதிகரித்து இருக்கிறது.

சூர்யா படத்தில்

சூர்யா படத்தில்

நெருக்கமான காட்சிகளை கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உதவியுடன் தமிழிலேயே ஏற்கனவே படமாக்கி உள்ள வரலாறுகள் நம்மிடையே இருக்கிறது. அதையும் சூர்யாவே மாற்றான் படத்தில் காஜல் அகர்வாலுக்கு லிப் கிஸ் அடிக்கும் காட்சிக்கு சிஜியை பயன்படுத்தியது எல்லாம் இனிமேல் மீமாக வைரலானாலும் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X