ஆஸ்கர் வென்ற முதல் கருப்பின ஹாலிவுட் ஹீரோ சிட்னி பாய்ட்டியர் மறைவு
நியூயார்க் : ஆஸ்கர் வென்ற முதல் கருப்பின ஹீரோ சிட்னி பாய்ட்டியர் காலமானார்.
கருப்பினத்தை சேர்ந்த சிட்னி பாய்ட்டியர் தனது நடிப்பால் ஏராளமான ரசிகர்களை கொண்டிருந்தவர்.
கடந்த 1960ல் வெளியான லிலிஸ் ஆஃப் தி பில்ட் படத்தில் நடித்ததன்மூலம் சிறப்பான விமர்சனங்களை பெற்றவர்.

சிட்னி பாய்ட்டியர் காலமானார்
உலகளவில் அனைவரது கனவான ஆஸ்கர் விருதை பெற்ற முதல் கறுப்பினத்தை சேர்ந்தவரும் பழம்பெரும் ஹாலிவுட் நடிகருமான சிட்னி பாய்ட்டியர் காலமானார். தன்னுடைய சிறப்பான நடிப்பின்மூலம் ஏராளமான ரசிகர்களை கொண்டிருந்தவர் சிட்னி பாய்ட்டியர்.

ஆஸ்கர் வென்ற முதல் கருப்பின நடிகர்
கடந்த 1960ல் வெளியான லிலிஸ் ஆஃப் தி பில்ட் படத்தின்மூலம் சிறந்த நடிகராக பேசப்பட்டவர். இந்தப் படம் இவருக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை பெற்றுத் தந்தது. இதன்மூலம் ஆஸ்கர் வென்ற முதல் கறுப்பின நடிகர் என்ற பெயரும் கிடைத்தது.

வயது மூப்பால் காலமானார்
அமெரிக்காவில் வசித்துவந்த இவர் தற்போது வயது மூப்பு காரணமாக நேற்றைய தினம் தன்னுடைய 94வது வயதில் உயிரிழந்தார் இவரது மறைவுக்கு உலகளவில் திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேடை நாடகங்களில் அறிமுகம்
மேடை நாடகங்கள்மூலம் தன்னை சினிமாவில் அறிமுகம் செய்து கொண்ட சிட்னி கடந்த 1949ல் நடித்த நோ வே அவுட் படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார். அதையடுத்து இவருக்கு எல்லாமே ஏறுமுகம்தான். வாய்ப்புகள் இவருக்கு குவியத் துவங்கின.

ஆஸ்கர் பெற்றுத்தந்த படம்
கடந்த 1958ல் இவர் நடித்து வெளியான தி டீஃபியன்ட் ஒன்ஸ் என்ற திரைப்படம் முதல் முறையாக ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அந்த ஆண்டு இவருக்கு ஆஸ்கர் கிடைக்கவில்லை. தொடர்ந்து 1961ல் வெளியான தி லிலிஸ் ஆஃப் தி ஃபீல்ட் படத்திற்கு இவருக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் வழங்கப்பட்டது.

கவுரவ ஆஸ்கர் விருது
1967ல் இவரது நடிப்பில் வெளியான டு சார், வித் லவ், இன் தி ஹீட் ஆஃப் தி நைட் உள்ளிட்ட படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இதையடுத்து பல வெற்றிப் படங்களில் தொடர்ந்து நடித்தார் சிட்னி. இந்நிலையில் கடந்த 2002ல் அமெரிக்க சினிமாவிற்கு அவர் அளித்த பங்களிப்பை போற்றும் வகையில் கவுரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

சிறப்பான நடிகராக மிளிர்ந்தவர்
நடிகராக மட்டுமின்றி கறுப்பின மக்களுக்காக தனது படங்களின்மூலம் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர் சிட்னி. கறுப்பின மக்கள் பல்வேறு சிரமங்களுக்கிடையில் வாழ்ந்த நிலையில், சிறப்பான நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர் சிட்னி பாய்ட்டியர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











