Plagiarism machines: என்னாது.. இனிமே திரைக்கதையை AI எழுதப் போகுதா? ஹாலிவுட்டில் கிளம்பிய எதிர்ப்பு!
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் தயாரிப்பாளர்கள் AI தொழில்நுட்பத்தை வைத்து குறைந்த செலவில் திரைக்கதைகளை எழுதலாம் என்கிற முயற்சியில் ஈடுபட்டு வருவதை ஹாலிவுட் எழுத்தாளர் சங்கம் வன்மையாக கண்டித்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது.
எந்திரன் படத்தில் வருவது போல Artificial Intelligence வைத்து ஏகப்பட்ட வேலைகளை செய்யலாம் என பெரிய பெரிய தயாரிப்பாளர்கள் முயற்சி செய்து வரும் நிலையில், அதனால் ஏற்படும் விளைவுகளை எடுத்துக் கூறி பிரபல ஹாலிவுட் எழுத்தாளர்கள் இந்த முயற்சி மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரித்து வருகின்றனர்.

AI தொழில்நுட்பம் திரைக்கதையையும் எழுதும் முயற்சியில் சில சோதனைகளை நடந்து வரும் நிலையில், அதனை எதிர்த்து வேலை நிறுத்த அறிவிப்பையும் எழுத்தாளர்கள் அறிவித்து இருப்பது ஹாலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திரைக்கதை எழுதும் AI: சினிமாவில் டீ ஏஜிங் என்கிற புதிய தொழில்நுட்பத்தில் வயதான நடிகர்களின் சுருக்கங்களை எல்லாம் களைந்து இளம் நடிகர்களாக காட்டுவதில் தற்போது AI பெரும் பங்கை வகித்து வருகிறது.
பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராயை அவ்வளவு அழகாக காட்டவும் பாகுபலி படத்தில் அனுஷ்காவை ஸ்லிம்மாக காட்டவும் AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறதாம். இந்நிலையில், அதையெல்லாம் தாண்டி தற்போது திரைக்கதையையே இந்த தொழில்நுட்பத்தை வைத்து உருவாக்க முடியும் என ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
சம்பளத்தை குறைக்க: செய்தியாளர்களுக்கு பதிலாக ரோபோக்கள் செய்திகளை வாசிக்கும் நிகழ்வுகளும் சமீபத்தில் அரங்கேறின. அதே போல AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிதாக சிந்தித்து திரைக்கதைகள் உருவாக்கினால் வித்தியாசமான படங்களை கொடுக்க முடியும் என்றும் பிரபல எழுத்தாளர்களுக்கு கொடுக்கப்படும் கோடிக்கணக்கான சம்பளத்தை குறைக்கலாம் என்கிற நோக்கத்துடன் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த முயற்சியை கையாள முனைப்பு காட்டி வருகின்றனவாம்.
ஆனால், இதனால் ஏற்படும் தீமைகளை பட்டியலிட்டு எழுத்தாளர்கள் சங்கம் கடும் எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.

ஹாலிவுட் எழுத்தாளர் சங்கம் எதிர்ப்பு: The Writers Guild of America கடந்த 15 வருடங்களாக இதுவரை ஒருமுறை கூட ஸ்ட்ரைக் செய்யாத நிலையில், முதன்முறையாக AI மூலம் சினிமா மற்றும் சீரியல்களுக்கான திரைக்கதை எழுதுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திங்கட்கிழமை வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.
மேலும், பல பிரபல எழுத்தாளர்கள் AI மூலம் கதை எழுதப்பட்டால் அந்த குப்பையை சரி செய்ய கண்டிப்பாக கம்மி காசுக்கு ஒரு எழுத்தாளர் தேவைப்படுவார். மேலும், உலகில் உள்ள பிறமொழி கதைகளை எளிதில் காப்பி அடித்து இந்த தொழில்நுட்பம் ஒரு திருட்டுக் கதையை உருவாக்கி விடும் அபாயமும் உள்ளதாக கூறி தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











