திடீரென மயங்கி விழுந்த ஹாரி பாட்டர் நடிகர்...மருத்துவமனையில் அனுமதி

கலிஃபோர்னியா : பிரிட்டனில் புகழ்பெற்ற நடிகராக இருப்பவர் டாம் ஃபெல்டன். இவர் ஹாரி பாட்டர் படங்களில் டிராகோ மால்ஃபாய் கேரக்டரில் நடித்து புகழ்பெற்றவர். தற்போது இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரபலங்களுக்கான Ryder Cup கோல்ஃப் விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த போட்டியில் டாமும் கலந்து கொண்டு விளையாடி உள்ளார். விளையாடிக் கொண்டிருந்த போதே திடீரென மைதானத்தில் மயங்கி விழுந்துள்ளார் டாம்.

Horry Potter Actor Tom Felton hospitalized

34 வயதாகும் டாம், இசையமைப்பாளரும் கூட. இவர் ஐரோப்பா சார்பில் இந்த விளையாட்டில் பங்கேற்று வருகிறார். விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக, திடீரென டாம் மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் ஓடி வந்து அவருக்கு உதவி செய்துள்ளனர்.

உடனடியாக ஸ்டெரச்சர் கொண்டு வரப்பட்டு, அருகில் இருந்த மருத்துவமனைக்கு டாம் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை குறித்த வேறு எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

Whistling Straits பகுதியில் நடந்து வரும் இந்த பிரபலங்களுக்கான கோல்ஃப் போட்டியில் ஐரோப்பா சார்பில் டாமும், Teemu Delanne யும் விளையாடி வந்தனர். அவரது உடல்நிலை தற்போது நன்றாக உள்ளதாக நெருங்கிய நண்பர்கள் பலர் தெரிவித்துள்ளனர். இருந்தாலும் டாம் விரைவில் குணமடைய பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலர் சோஷியல் மீடியாவில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

டாம் ஃபெல்டன், கோல்ஃப் விளையாடுவது இது முதல் முறை இல்லையாம். இதற்கு முன் இங்கிலாந்தில் பலமுறை சாம்பியன்ஷிப் போட்டி உள்ளிட்ட பல கோல்ஃப் விளையாட்டுக்களில் பங்கேற்றுள்ளாராம். தற்போது கூட 18 வது குழியில் பந்தை போட முயற்சித்த போது தான் டாம் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X