சின்டி கிராப்போர்.. உலகின் முன்னணி மாடல் மட்டுமல்ல!

By Mayura Akilan

சுண்டி இழுக்கும் அழகு.. உலகின் நம்பர் ஒன் மாடலாக நீண்டகாலம் இருந்தவர். இப்போதும் தான்.

பல ஹாலிவுட் சினிமாக்களிலும் நடித்துள்ள இவர் தனது 14வது திருமண நாளை வெற்றிகரமாக கொண்டாடியுள்ளார்.

ஹாலிவுட்டில் ஒருவரது திருமண வாழ்க்கை என்பது இவ்வளவு காலத்திற்கு நீடிப்பது என்பதே பெரிய ஆச்சரியமான விஷயம். இதனால் சிண்டியின் திருமண வாழ்க்கையும் பலரைக் கவரும் விஷயமாக மாறியுள்ளது.

14 வருட மணவாழ்க்கை

14 வருட மணவாழ்க்கை

ராண்டி ஜெர்பருடன் தான் வெற்றிகரமாக வாழ்த்தை நடத்தி வருவது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் சிண்டி. 47 வயதான சிண்டிக்கு, பிரெஸ்லி என்ற 13 வயது மகனும், கையா என்ற 11 வயதுக் குழந்தையும் உள்ளனர்.

மணம் திறந்த வாக்குமூலம்

மணம் திறந்த வாக்குமூலம்

ஓப்ரா வின்பிரேயின் மாஸ்டர் கிளாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிண்டி இதுகுறித்துக் கூறுகையில்,

நானும், ராண்டியும் நண்பர்களாகத்தான் முதலில் பழகினோம். அதைத் தாண்டி இருவருமே யோசிக்கவில்லை. ஆனால் நட்பு ஆழமானபோது அது காதலாக மாறியது, உறவில் முடிந்தது. இருவரும் இந்த நிமிடம் வரை ஆழமாக நேசிக்கிறோம்.

காதலுடன் இருக்கிறோம்

காதலுடன் இருக்கிறோம்

எங்களுக்குள் எந்த விரிசலும் இல்லை. ஒரு பத்திரிக்கை சமீபத்தில் அப்படி செய்தி போட்டது. ஆனால் அது தவறு. இருவரும் நட்பாக, அன்பாக, காதலுடன் இருக்கிறோம்.

எங்களுக்கும் ஊடல் வரும்

எங்களுக்கும் ஊடல் வரும்

இருவரும் ஒருவரை ஒருவர் மதிக்கிறோம். எனக்கு ராண்டியின் நட்பு காலாகாலத்திற்கும் தேவை.

எங்களுக்குள்ளும் ஊடல்கள் வந்துள்ளன. ஆனால் அது சூரியனைக் கண்ட பனி போல. உடனே போய் விடும் என்றார் சிண்டி.

இவர் 2 வது கணவர்தான்

இவர் 2 வது கணவர்தான்

சிண்டிக்கு ராண்டி முதல் கணவர் அல்ல, 2வது கணவர்தான். 1991ம் ஆண்டு ரிச்சர்ட் கெரேவை மணந்து, 95 வரை அவரது மனைவியாக இருந்தவர் சிண்டி என்பது நினைவிருக்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X