லெஸ்பியனாக இருந்த மார்லின் மன்றோ!

By Mayura Akilan

Marilyn Monroe
பிரபலங்கள் மரணமடைந்தாலும் அவர்களைப்பற்றிய செய்திகளுக்கு மட்டும் மரணம் என்பது கிடையாது. என்றைக்கும் அவை புதிது போலவே மக்களால் வாசிக்கப்படும். அதுபோலத்தால் உலகப் புகழ் பெற்ற ஹாலிவுட் நட்சத்திரமான மர்லின் மன்ரோ மரணமடைந்து 50 ஆண்டுகள் ஆன பின்னரும் அவரைப்பற்றிய சுவாரஸ்யமான செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

ஹாலிவுட் சினிமா உலகின் ராணியாக விளங்கியவர் மர்லின் மன்றோ. அவருக்கு இணையாக அகில உலகப் புகழ் பெற்ற நடிகை வேறு எவரும் இல்லை. அவரை பிடிக்கா ஆண்களே இருக்க முடியாது.அவருடைய கடைக்கண் பார்வைக்காக எத்தனையோ கோடீசுவரர்கள் தவம் கிடந்தார்கள்.

உலகம் முழுவதும் மர்லின் மன்ரோவுக்கு கோடானு கோடி ரசிகர்கள் இருந்தனர்கள். இவர்களில் ஆண்கள்தான் அதிகம். ஆனால் மன்ரோவுக்கு ஆண்களை விட பெண்களையே அதிகம் பிடித்ததாம். பெண்களுடன்தான் அவர் நெருக்கமான நட்பையும் வைத்திருந்தாராம். இன்னும் ஒரு படி மேலே போய் சில பெண்களுடன் அவர் லெஸ்பியன் உறவும் கொண்டிருந்தாராம்.

மிஷல் மார்கன் என்பவர் எழுதியுள்ள Marilyn Monroe: Private And Undisclosed என்ற நூலில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த நூலில், மர்லின் மன்ரோ மீது மோகம் கொண்டு திரிந்தோர் எண்ணிக்கை எண்ணி மாள முடியாதது. ஆனால் அவருக்கோ ஆண்கள் மீது துளியும் ஈடுபாடு வரவில்லை. அவருக்கு ஆண்களுடன் உறவு கொள்வதில் பிடித்தமும் இல்லை, அதை அவரால் சரியாக செய்யவும் முடியவில்லை. மாறாக, அவர் உறவு வைத்திருந்த பெண்களிடம் பெரும் இன்பத்தை அனுபவித்தாக மன்றோவே கூறியுள்ளதாக மிஷல் குறிப்பிட்டுள்ளார்.

அக்காலத்தில் பிரபலமான ஜோன் கிராபோர்ட், பார்பரா ஸ்டான்விக், மெர்லின் டயட்ரிச், எலிசபெத் டெய்லர் ஆகியோருடன் மன்ரோ லெஸ்பியன் உறவு வைத்திருந்ததாக அவரே ஒரு கட்டத்தில் கூறியுள்ளார். இவர்கள் போக நதாஷா லிடஸ், பாலா ஸ்டிராஸ்பெர்க் ஆகியோருடனும் அவருக்கு லெஸ்பியன் உறவு இருந்ததாம்.

மர்லின் மன்றோவின் சொந்தப் பெயர் நார்மாஜின் டென்சன். 3 முறை திருமணம் செய்தார். மூன்று முறை திருமணமாகி, மூன்று முறை விவகாரத்து செய்துவிட்டார். முதல் கணவர் ஜேம்ஸ், போலீஸ்காரர். 2_வது கணவர் பெயர் ஜேர்டிமாக்கியா இவர் கால்பந்து வீரர். 3_வது கணவர் ஆர்தர்மில்லர் சினிமா படத்தயாரிப்பாளர். அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த கென்னடிக்கும், மன்றோவுக்கும் காதல் இருந்தது என்று, இருவருடைய மறைவுக்குப்பிறகு பத்திரிகைகளில் பரபரப்பான செய்திகள் வெளிவந்தன.

மன்றோவின் திருமண வாழ்க்கையின் தோல்விக்கு அவரது லெஸ்பியன் பழக்கம்தான் முக்கியக் காரணம் என்கிறார்கள். அவருக்கு ஆண்களுடனான இயற்கையான செக்ஸ் உறவு பிடிக்கவில்லையாம். மாறாக, பெண்களுடன் செக்ஸ் இன்பம் காணவே அவர் பெரிதும் விரும்பினாராம். இதனால்தான் திருமண வாழக்கையில் அவரால் நிலைக்க முடியவில்லை என்கிறார்கள்.

புத்தகம் வெளிவந்த பின்னர் இன்னும் எந்த மாதிரியான பரபரப்பை கிளப்பப் போகிறதோ ?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X