Perfect Days: தினமும் டாய்லெட் கழுவுறதுதான் வேலை.. ஆஸ்கருக்கு சென்ற ஜப்பான் படம்.. இப்படியொரு கதையா?

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருதுகளுக்கு இந்தியா சார்பில் 2018 எனும் மலையாள திரைப்படம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அந்த படம் நாமினேட் ஆகவில்லை. ஆஸ்கர் விருது விழாவுக்கு போட்டியிட தேர்வான சில படங்களில் முக்கியமான படமாக ஜப்பானிய திரைப்படம் பர்ஃபெக்ட்டேஸ் (Perfect Days) உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு சிறந்த வெளிநாட்டு திரைப்படப் பிரிவில் போட்டியிடும் இந்த படம் ஆஸ்கர் விருதை தட்டித் தூக்கும் என்றே கூறுகின்றனர்.

அப்படி இந்த படம் ஆஸ்கருக்கு தேர்வாகும் அளவுக்கு என்ன தான் கதை என கேட்டால் அப்படியே ஷாக் ஆக்கும் அளவுக்கு தினமும் ஜப்பானில் டாய்லெட் கழுவும் ஒரு நபரின் வாழ்க்கையை பற்றிய படம் என அதிர வைக்கின்றனர். அந்த படம் குறித்து விரிவாக இங்கே பார்க்கலாம் வாங்க..

How Perfect Days grabs Oscars team and worldwide fans attention?

ஆஸ்கர் நாமினேஷனில்: அடுத்த மார்ச் மாதம் ஆஸ்கர் விருது விழா பிரம்மாண்டமாக லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெற உள்ளது. அந்த விழாவில் சிறந்த வெளிநாட்டு படப்பிரிவில் இங்கிலாந்தை சேர்ந்த ஜோன் ஆஃப் இன்ட்ரஸ்ட், ஜப்பானை சேர்ந்த பர்ஃபெக்ட் டேஸ், ஸ்பெயினை சேர்ந்த சொசைட்டி ஆஃப் தி ஸ்னோ, ஜெர்மனியை சேர்ந்த தி டீச்சர்ஸ் லாஞ்ச், இத்தாலியை சேர்ந்த லோ கேப்பிடனோ என்கிற படங்கள் போட்டியிடுகின்றன. ஒவ்வொரு படங்களும் வேறலெவல் படங்கள் என்றே சொல்லலாம். அதிலும் சொசைட்டி ஆஃப் தி ஸ்னோ படம் ரசிகர்களையே பனியில் சிக்க வைத்தது போல உறைய வைத்திருக்கும். அதற்கு டஃப் கொடுக்கும் விதமாக உள்ள படம் தான் பெர்ஃபக்ட் டேஸ் திரைப்படம்.

How Perfect Days grabs Oscars team and worldwide fans attention?

டாய்லெட் கழுவுறதுதான் வேலை: ஜெர்மனி நாட்டை சேர்ந்த விம் வெண்டர்ஸ் இயக்கத்தில் வெளியான ஜப்பானிய மொழி திரைப்படமான Perfect Days படத்தில் ஹீரோவாக நடித்துள்ள கொஜி யகுஷா(Koji Yakusha) அந்த படத்தில் ஒரு டாய்லெட் கழுவுபவராக நடித்துள்ளார். மனைவி, மக்கள் என யாருமே இல்லாத தனிக்கட்டை. தினமும் அதிகாலையில் எழுந்து தனது அன்றாட வேலைகளை முடித்து விட்டு காலையிலேயே பப்ளிக் கழிவறைகளை சுத்தம் செய்ய கிளம்பிச் சென்று விடுவார். ஜப்பானியர்கள் வேலையில் எந்தளவுக்கு சுறுசுறுப்பானவர்கள், நேர்மையானவர்கள் என்பதை காட்டும் விதமாக பள பளவென கழிவறைகளை இவர் சுத்தம் செய்யும் காட்சிகள் தான் படம் முழுக்க நிறைந்திருக்கும்.

சின்ன சின்ன சந்தோஷங்கள்: வாழ்வில் சந்தோஷமாக இருக்க அதிகமாக பணம், காசு, பேர், புகழ் எல்லாம் வைத்திருக்க வேண்டும் என்றெல்லாம் இல்லை என்றும் எந்த தொழில் செய்தாலும் மன நிறைவுடன் சின்ன சின்ன சந்தோஷங்களை அந்த தருணங்களை கொண்டாட்டமாக வாழ்ந்தாலே போதும் அதுதான் நிறைவான வாழ்க்கை என்பதை இந்த பர்ஃபெக்ட் டேஸ் திரைப்படம் பெர்ஃபக்ட்டாக எடுத்துக் காட்டுகிறது. ஹீரோவாக எல்லாம் அந்த நடிகரை நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு அந்த கதாபாத்திரமாகவே மாறியிருப்பார்.

ஓடிடியில் இல்லை:தினமும் கார்டன் போன்ற இடத்தில் மதிய உணவை உண்ணும் அவர், அங்கே உள்ள இரு மரங்களை தினமும் போட்டோ எடுத்து வைத்துக் கொள்வார். அந்த மரம் ஒவ்வொரு நாளும் எப்படி வளர்ந்திருக்கிறது என்பது அவர் எடுத்த நூற்றுக்கணக்கான போட்டோக்கள் உணர்த்தும். ஜப்பான் நாட்டில் வெளியான இந்த திரைப்படம் இந்த ஆண்டு ஆஸ்கர் போட்டிக்கு தேர்வாகி இருக்கிறது. விருதை தட்டித் தூக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆஸ்கர் விழா முடிந்த பின்னர் தான் ஓடிடி பக்கம் வரும் என்கின்றனர். இப்போதைக்கு அமெரிக்கா மற்றும் ஜெர்மனியில் சில தியேட்டர்களில் இந்த படம் ஓடுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X