twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்த கொரோனா வைரஸை 2011-ஆம் வருஷமே கணித்தது எப்படி? அந்த ஹாலிவுட் படத்துக்கு அப்படியொரு கிராக்கி!

    By
    |

    லாஸ் ஏஞ்சல்ஸ்: கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில், சில வருடங்களுக்கு முன்பே வெளியான ஹாலிவுட் படத்தைப் பார்க்க ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. சீனாவை அடுத்து இத்தாலி, ஈரான், உள்ளிட்ட நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, இந்த வைரஸ்.

    உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கைப் பதினோராயிரத்தை தொட்டுள்ளது.

    தமிழகத்தில்

    தமிழகத்தில்

    இந்தியாவிலும் கொரோனா, பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருந்தாலும் இருநூறுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

    ஹாலிவுட் படம்

    ஹாலிவுட் படம்

    இந்நிலையில், கடந்த 2011ம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படம், அப்படியே கொரோனா வைரஸை நினைவு படுத்துவதால், அதைப் பார்க்க, ரசிகர்கள் திடீரென அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஸ்டீவன் சோடர்பர்க் (Steven Soderbergh) இயக்கத்தில் மரியான் கோட்டிலார்ட், மாட் டாமன், லாரன்ஸ் பிஷ்பர்ன், ஜூட் லா, கேட் வின்ஸ்லெட், ஜெனிபர் உட்பட பலர் நடித்திருந்த அந்தப் படம், கன்டஜியன் (contagion).

    தனிமைப் படுத்தல்

    தனிமைப் படுத்தல்

    இந்தப் படத்தின் கதை ஹாங்காங்கில் இருந்து தொடங்குகிறது. பிசினஸ் விஷயமாக அங்கு சென்றுவிட்டு சிகாகோ திரும்பும் பெத் எம்ஹாவ் என்ற பெண் திடீரென்று வீட்டில் சரிந்து விழுகிறார். தூக்கிக்கொண்டு மருத்துவமனை செல்கிறார், கணவர் மிட்ச். காரணமே தெரியாமல் அங்கு இறக்கிறார் பெத். பிறகு சோகத்துடன் வீட்டுக்கு வந்தால், அவரது வளர்ப்பு மகனும் இறக்க, தனிமைப்படுத்தப்படுகிறார் மிட்ச்.

    இருமல், தும்மல்

    இருமல், தும்மல்

    பின்னர் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதன் காரணமாக மகளுடன் விடுவிக்கப்படுகிறார். பிறகு பெத்-தை தாக்கியது ஒரு கொடிய வைரஸ் என்பது தெரிய வருகிறது. அதைத் தடுக்க போராடுகிறார்கள் டாக்டர்கள். அதற்குள் அந்த வைரஸ், இருமல், தும்மல் மூலம் அடுத்தவர்களுக்குப் பரவி, பலரது உயிர்களை காவு வாங்குகிறது என்பது போல கதை அமைக்கப்பட்டுள்ளது.

    மொத்த பிரச்னை

    மொத்த பிரச்னை

    இப்போது உலகை அச்சுறுத்தும் கொரோனாவை இந்தப் படம் அப்படியே ஞாபகப்படுத்துகிறது. இந்தப் படம் வைரஸால் உலகம் பாதிக்கப்படுவதை மட்டுமல்ல, அதனால் ஏற்படும் மொத்தப் பிரச்னைகளையும் பேசுகிறது, சமூகம் தனிமைப்படுத்தப்படுவது, அதனால் ஏற்படும் சிக்கல்கள், மருந்து கண்டுபிடிப்பதில் உள்ள சிக்கல், மருத்துவர்கள் அறிவுறுத்தும் விதிகளை பின்பற்ற மறுக்கும் மக்கள் எனச் செல்கிறது இதன் கதை

    ஹாங்காங் வைரஸ்

    ஹாங்காங் வைரஸ்

    இந்தப் படத்தை பல தொற்றுநோய் தடுப்பு நிபுணர்களை கலந்தாலோசித்து யதார்த்தமாக உருவாக்கி உள்ளனர். 'முதலில் இதன் கதையை 1918 ஆம் ஆண்டு, பல மில்லியன் மக்களைக் கொன்ற காய்ச்சலுடன் தொடர்புடையதாக உருவாக்கி இருந்தனர். பிறகு 2009 ஆம் ஆண்டு அமெரிக்காவை மிரட்டிய ஸ்வைன் புளு விஷயமாக மாற்றினர். பிறகுதான் ஹாங்காங்கில் இருந்து உருவான வைரஸ் என்று கதையை மாற்றி அமைத்தார்கள் என்கிறார், படத்தின் கதைக்கு உதவிய கொலம்பியாவின் நோய் தொற்று மற்றும் நோய் எதிர்ப்பு மருத்துவ மைய இயக்குனர் இயான் லிப்கின்.

    கொரோனா

    கொரோனா

    இந்தப் படத்தைப் பார்ப்பதற்கு அமெரிக்க ரசிகர்கள் மட்டுமின்றி பலர் இப்போது அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஐடியூன்ஸில் மிகவும் பிரபலமான மூன்றாவது படமாக இது இருக்கிறது. இந்தப் படத்துக்கு திரைக்கதை எழுதிய ஸ்காட் பர்ன்ஸ் கூறும்போது, கொரோனா பயத்தால் மக்கள் இந்தப் படத்தை பார்க்கிறார்கள். ஆனால், இதற்கும் கொரோனாவுக்கும் சம்மந்தமில்லை என்கிறார்.

    English summary
    Hollywood movie contagion perfectly predicted the coronovirus crises.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X