உலகமே விரும்பும் பெண் இவர்தானாம்...!

By Sudha

லண்டன்: உலகின் மிகவும் விருப்பத்துக்குரிய பெண்மாக ஜெனீபர் லாரன்ஸ் தேர்வாகியுள்ளார். 22 வயதான இவர் ஆடவர் இணையதள இதழான ஆஸ்க்மென்.காம் நடத்திய சர்வேயில் இந்தப் பெருமையைப் பெற்றுள்ளார்.

ஹாலிவுட் நடிகைதான் ஜெனீபர் லாரண்ஸ். படு அழகானவர், ஆடவர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் வைத்திருப்பவர். மிகவும் எளிமையானவரும் கூட. இவருக்குத்தான் இப்போது எக்கச்சக்கம் பேர் ஓட்டுப் போட்டு உலகிலேயே அதிக விருப்பத்துக்குரிய பெண்ணாக தேர்வு செய்துள்ளனர்.

ஆஸ்க்மென்.காம் இணையதளம்தான் இந்த சர்வேயை நடத்தியது. இதில் ஜெனீபருக்கு ஆதரவாக 20.4 லட்சம் பேர் கலந்து கொண்டு ஓட்டுப் போட்டுள்ளனர்.

ஜெனீபர் ரொம்ப பிரஷ்...

ஜெனீபர் ரொம்ப பிரஷ்...

ஜெனீபர் குறித்து இணையதளத்தின் ஆசிரியர் ஜேம்ஸ் பாசில் கூறுகையில், மற்றவர்களை விட ஜெனீபருக்கு நல்ல ஆதரவு கிடைத்துள்ளது. அவர் ரொம்ப பிரஷ். எந்த வதந்தியிலும் சிக்காதவர். அதுவே அவருக்கு நிறைய ஆதரவாளர்களைத் திரட்டிக் கொடுத்து விட்டது என்றார்.

2வது இடத்தில் மிலா குனிஸ்

2வது இடத்தில் மிலா குனிஸ்

2வது இடத்தில் நடிகை மிலா குனிஸ் வருகிறார். இவருக்கு அடுத்த இடத்தில் மாடல் அழகி கேட் உப்டன் இருக்கிறார்.

4வது இடம் ரிஹானாவுக்கு...

4வது இடம் ரிஹானாவுக்கு...

கருப்பழகி ரிஹானாவுக்கு இந்த வரிசையில் 4வது இடம் கிடைத்துள்ளது. நடிகை எம்மா ஸ்டோன் 5வது இடத்தைப் பிடித்திருக்கிறார்.

சறுக்கி விழுந்த சோபியா

சறுக்கி விழுந்த சோபியா

கவர்ச்சிக் கட்டழகியும், டிவி நடிகையுமான சோபியா வெர்கரா கடந்த ஆண்டு வெற்றியாளராக மகுடம் சூட்டியிருந்தார். ஆனால் இந்த முறை அவர் 12வது இடத்துக்குத் தள்ளப்பட்டு விட்டார்.

மிஷல் ஒபாமாவுக்கு 48வது இடம்

மிஷல் ஒபாமாவுக்கு 48வது இடம்

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷல் ஒபாமாவும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். அவருக்கு 48வது இடம் கிடைத்துள்ளது.

ஜெனீபரின் காதல்

ஜெனீபரின் காதல்

ஜெனீபர் வதந்திகளில் சிக்கவில்லை என்று கூறப்பட்டாலும் கூட அவருக்கும் ஒரு ஆள் இருக்கிறார். அவரது பெயர் நிக்கோலஸ் ஹோல்ட். இவர் இங்கிலாந்து நடிகர். இவருடன் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நெருங்கிப் பழகி வருகிறார் ஜெனீபர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X