கொரோனா பாதிப்பில்லை.. கடவுளுக்கு நன்றி..நான் இப்போது நன்றாக இருக்கிறேன்..பிரபல பாப் பாடகி தகவல்

By

நியூயார்க்: கொரோனாவால் தான் பாதிக்கப்படவில்லை என்று பாப் பாடகி மடோனா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸால் உலக நாடுகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. லட்சக்கணக்கானோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் இந்த தொற்று அதிகமாகப் பரவி வருகிறது. இதன் காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஹாலிவுட் பிரபலங்கள்

ஹாலிவுட் பிரபலங்கள்

ஹாலிவுட் பிரபலங்களையும் இந்த தொற்றுவிட்டு வைக்கவில்லை. பல மூத்த நடிகர், நடிகைகள் இந்த வைரஸால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தனக்கு நடத்தப்பட்ட கொரோனா வைரஸ் ஆன்டிபாடீஸ் பரிசோதனையில், பாசிட்டிவ் என்று வந்துள்ளதாகக் கடந்த சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தார், பிரபல பாப் பாடகி மடோனா.

நோய் தடுப்பு மையம்

நோய் தடுப்பு மையம்

ஆன்டிபாடீஸ் சோதனை என்பது, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தால், அதை எதிர்த்துப் போராடுவதற்கான ஆன்டிபாடீஸ் ஒருவரது ரத்தத்தில் உருவாகி இருக்கும். அதைக் கண்டுபிடிப்பதைதான் ஆன்டிபாடீஸ் சோதனை என்கிறார்கள். அமெரிக்காவின் நோய் தடுப்பு மையம், இந்த சோதனையை செய்து வருகிறது. இந்த ஆன்டிபாடிஸ் தனக்கு இருப்பதாகத் தெரிவித்திருந்தார் மடோனா.

கோவிட்-19 காற்று

கோவிட்-19 காற்று

'கொரோனா வைரஸ் தொற்றுக்கான பரிசோதனை செய்துகொண்டேன். என்னுடலில் ஆன்டிபாடீஸ் இருப்பது தெரிய வந்துள்ளது. காரை எடுத்துக் கொண்டு நீண்ட பயணம் செல்லப் போகிறேன். ஜன்னலை இறக்கிவிட்டபடி, கோவிட்-19 இருக்கும் காற்றைச் சுவாசிக்கப் போகிறேன்' என்று கூறி இருந்தார். இது பரபரப்பானது.

கடவுளுக்கு நன்றி

கடவுளுக்கு நன்றி

மடோனா கடந்த 7 வாரங்களுக்கு முன் தனது குழுவுடன் பாரிஸுக்கு சென்றிருந்தார். அப்போது அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதை அடுத்து, கொரோனா பரிசோதனை செய்துகொண்டனர். 'எங்களுக்கு காய்ச்சல் இருந்தது. கடவுளுக்கு நன்றி. இப்போது ஆரோக்கியமாக இருக்கிறோம். கோவிட் 19 வைரஸின் தன்மை குறித்து ஆராய்வதை விட, பரபரப்பான தலைப்புச் செய்திகளைத் நம்புவர்களுக்கு சொல்கிறேன், 'நான் இப்போது நோய்வாய்ப்படவில்லை' என்று கூறியுள்ளார் மடோனா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X