For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  இங்க அவங்கனா.. ஹாலிவுட்ல இவங்க தான் போல.. ஜானி டெப் என்னை கொல்ல பார்த்தார்.. மனைவி ‘பகீர்’

  |

  இங்கிலாந்து: பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் நடிகர் ஜானி டெப்புக்கும் அவரது முன்னாள் மனைவி மற்றும் அக்வாமேன் நடிகை அம்பெர் ஹெர்டுக்கும் இடையே மோதல் வலுத்து வருகின்றன.

  கடந்த திங்கட் கிழமை, லண்டன் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சி சொன்ன அம்பெர் ஹெர்ட், பல முறை ஜானி டெப் தன்னை கொல்லப் பார்த்ததாகவும், அவர் தன்னை கொன்றுவிடுவார் என தான் பயந்த தருணங்கள் நிகழ்ந்ததாகவும் கூறி பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.

  சமீபத்தில், தனது பெயரை சிறுநீரால் ஜானி டெப் எழுதினார் என சர்ச்சையை கிளப்பிய அம்பெர் தற்பொது கொலை செய்யத் துணிந்தார் என்கிற ரீதிக்கு வாக்குமூலம் அளித்து வருகிறார்.

  கொரோனா வைரஸ் இப்படி கொல்லுதே.. கிறிஸ்டோபர் நோலனின் 'டெனட்' ரிலீஸ் மீண்டும் தள்ளி வைப்பு!கொரோனா வைரஸ் இப்படி கொல்லுதே.. கிறிஸ்டோபர் நோலனின் 'டெனட்' ரிலீஸ் மீண்டும் தள்ளி வைப்பு!

  ஜேக்ஸ் பேரோவே ஆனாலும்

  ஜேக்ஸ் பேரோவே ஆனாலும்

  முதல் மனைவி அன்னி அல்லிசன் என்பவரை இரண்டே ஆண்டுகளில் விவாகரத்து செய்த ஹாலிவுட் ஹீரோ ஜானி டெப். பின்னர், அக்வாமேன் உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்துள்ள அம்பெர் ஹெர்ட் என்பவரை கடந்த 2015ம் ஆண்டு இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ஆனால், இந்த திருமணமும் அவருக்கு நீடிக்காமல் 2 ஆண்டுகளிலேயே விவாகரத்து ஆகி சட்ட சிக்கலிலும் கொண்டு வந்து சேர்த்து இருக்கிறது.

  350 கோடி வழக்கு

  350 கோடி வழக்கு

  அசகாய சூரன், கடற்கொள்ளையன், கேப்டன் ஜாக்ஸ்பேரோவாக நடித்து உலக ரசிகர்களை கவர்ந்த ஜானி டெப், என் பொண்டாட்டி என்னை அடிக்கிறா, கை விரலை அறுத்துட்டா, அவக்கூட வாழ பிடிக்கல என மூக்கொழுகி 350 கோடிக்கு வழக்கும் போட்டு விட்டார். பதிலுக்கு அவரும், தன்னை அடித்தார், மிரட்டினார் என கூறி வந்த அம்பெர் ஹெர்ட், தற்போது கொலை மிரட்டல் பழியையும் ஜானி டெப் மீது போட்டுள்ளார்.

  அருவருப்பின் உச்சம்

  அருவருப்பின் உச்சம்

  தனது இரண்டாவது மனைவியான அம்பெர் ஹெர்ட் படுக்கையிலேயே மலம் கழித்து விட்டார் என்றும், இல்லை இல்லை அவர் தான் சொத்து பத்திரத்தில் என் பெயரை உச்சாவில் எழுதினார் என்றும் ஸ்கூல் புள்ளிங்கோ மாதிரி மாற்றி மாற்றி சண்டை போட, லண்டன் நீதிமன்றமே ஆடி போய் விட்டது.

  அவ்வளவும் மேக்கப்

  அவ்வளவும் மேக்கப்

  ஜானி டெப் ஒரு போதும் அம்பெர் ஹெர்டை கை நீட்டி அடிக்கவில்லை என்றும், அவர் காட்டிய போட்டோக்கள் எல்லாம் லிப்ஸ்டிக்கால் போட்டுக் கொண்டு போலி காயங்கள் என்றும் ஜானி டெப்பின் தரப்பு ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளது. ஆனால், அவர் தான் சிறந்த நடிகர், பொய் சாட்சிகளை உருவாக்கி என்னை சிக்க வைக்கப் பார்க்கிறார் என அம்பெர் ஹெர்டும் நீலிக் கண்ணீர் வடிக்க ஆரம்பித்துள்ளார்.

  தற்காப்புக்காக

  தற்காப்புக்காக

  இந்நிலையில், கடந்த திங்கள் கிழமை லண்டன் நீதிமன்றத்தில் மீண்டும் இந்த குடும்ப வழக்கு விசாரிக்கப்பட்டது. அப்போது தனது வாக்குமூலத்தை பதிவு செய்த நடிகை அம்பெர் ஹெர்ட், தான் ஒரு போதும் ஜானி டெப்பை தாக்கவில்லை என்றும், அவர் என்னை அடிக்க பூந்தொட்டிகளையும், செல்போன்களை தூக்கி வீசுவார் என்றும், அதனை தடுக்க சில வற்றை நான் தற்காப்புக்காக வீசும் போது அவர் மீது பட்டிருக்கலாம் என்றார்.

  கொலை செய்துவிடுவார்

  கொலை செய்துவிடுவார்

  மேலும், அவருடன் வாழ்ந்த கொஞ்ச நாட்களும் நரக வேதனை என்றும், எப்போதும் அவர் என்னை கொன்று விடுவாரோ என்ற அச்சம் இருந்துக் கொண்டே இருந்ததாகவும் அம்பெர் ஹெர்ட் தற்போது அடுத்த ஆட்டம் பாமை வீசியுள்ளார். இவரது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ள நீதி மன்றம் அடுத்த கட்ட விசாரணைக்கு தயாராகி வருகிறது. இந்த வழக்கு எங்கு போய் முடியப் போகுது என்பது தான் ஒட்டுமொத்த ஹாலிவுட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.

  English summary
  Amber Heard feared she would be killed by Johnny Depp, who was violent and abusive when high on drink or drugs, a London court has been told.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X