நல்லா கேட்டுக்குங்க, நான் கொரோனால இருந்து குணமாயிட்டேன், குணமாயிட்டேன்... பிரபல ஹீரோயின் அறிவிப்பு!
லாஸ் ஏஞ்சல்ஸ்: கொரோனாவில் இருந்து முழுமையாகக் குணமாகிவிட்டேன் என்று ஜேம்ஸ்பாண்ட் பட ஹீரோயின் தெரிவித்துள்ளார்.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது.
சீனாவை அடுத்து இத்தாலி, ஈரான், உள்ளிட்ட நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, இந்த வைரஸ்.

படப்பிடிப்புகள் ரத்து
இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்கள் அதிகமாகக் கூடும் மால்கள், தியேட்டர்கள் உள்ளிட்டவற்றுக்கு 31 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளன. சினிமா படப்பிடிப்புகள், ஐபிஎல் விளையாட்டு போட்டிகள் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன. மக்கள் பாதுகாப்பாக இருப்பது பற்றி அரசு அறுவுறுத்தி வருகிறது.

டாம் ஹான்க்ஸ்
இந்நிலையில், இந்த கொரோனா வைரஸ் பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை. பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் மற்றும் அவரது மனைவி ரீட்டா வில்சனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. வார்னர் பிரதர்ஸ் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் டாம் ஹாங்க்ஸ் நடித்து வருகிறார். அதன் ஷூட்டிங் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த நிலையில், டாம் ஹாங்க்ஸ் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா பாதித்தது.

பிரார்த்தனை
தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகர் டாம் ஹாங்க்ஸ், கொரோனா வைரஸ் தங்களைத் தாக்கியது குறித்து அறிந்து, பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு நன்றி. இதுவரை தனிமைப்படுத்தப்பட்டே இருக்கிறோம். எங்களால் யாருக்கும் இந்தத் தொற்றுப் பரவாமல் பார்த்துக் கொள்கிறோம். தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருகிறோம் என்று தெரிவித்திருந்தார்.

ஓல்கா குரிலென்கா
இந்நிலையில், ஜேம்ஸ்பாண்ட் பட ஹீரோயின், ஓல்கா குரிலென்கோ (Olga Kurylenko)வையும் இந்த கொரோனா விட்டு வைக்கவில்லை. இவர், குவாண்டம் ஆப் சோலஸ், ஒபிலிவியான், மொமன்டம், த ரூம் உட்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை தனது இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த சில நாட்களுக்கு முன் அவரே தெரிவித்திருந்தார்.

தலைவலி காய்ச்சல்
இந்நிலையில் தனக்கு கொரோனா குணமாகிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இதுபற்றி இன்ஸ்டாகிராமில், கடந்த ஒருவாரமாக மோசமாக உணர்ந்தேன். அதிகமான நேரம் படுக்கையிலேயே இருந்தேன். தூங்கினேன். கடுமையான தலைவலியும் காய்ச்சலும் இருந்தன. இரண்டாவது வாரம் காய்ச்சல் நீங்கியது. இருமல் இருந்ததால், சோர்வாக உணர்ந்தேன். வாரத்தின் முடிவில், இருமல் போய்விட்டது. இப்போது நன்றாக இருக்கிறேன். இந்த நேரத்தை மகனுடன்ம் செலவழித்துக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











