இந்தியர்கள் திறமைசாலிகள், கடின உழைப்பாளிகள்- அர்னால்ட் ஸ்வாஸ்நேகர்
டெல்லி: இந்தியா வருவதை தான் மிகவும் நேசிப்பதாகத் தெரிவித்துள்ளார் பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வாஸ்நேகர்.
ஷங்கரின் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் ‘ஐ'. இப்படத்தின் ஆடியோ ரிலீசில் கலந்து கொள்வதற்காக கடந்த செப்டம்பர் மாதம் சென்னை வந்திருந்தார் 67 வயது ஹாலிவுட் நடிகர் அர்னால்டு. அப்போது, விழா ஒருங்கிணைப்பில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, அவர் பாதியிலேயே நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக கடந்த வாரம் மீண்டும் இந்தியா வந்திருந்தார் அர்னால்டு. அப்போது செய்தியாளர்கள் மத்தியில் அவர் கூறியதாவது :-

இந்தியா வர விரும்புகிறேன்...
நான் திரைத்துறை, உடற்பயிற்சி உள்ளிட்டவைகளை ஊக்குவிக்க பல முறை இந்தியா வந்துள்ளேன். மிகச்சிறந்த நாடான இந்தியாவிற்கு வருவதை நான் விரும்புகிறேன்.

கடின உழைப்பாளிகள்...
இங்கு மிகப்பெரிய மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி உள்ளது. இங்குள்ள மக்கள் மிகவும் திறமைசாலிகளாகவும் கடின உழைப்பு மிக்கவர்களாகவும் உள்ளனர்.

மிகச் சிறந்த வரவேற்பு...
எனக்கு எப்போதுமே இங்கு மிகச்சிறந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. நான் விரைவில் மீண்டும் இங்கு வருவேன்" என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ரசிகர் பட்டாளம்...
ஹாலிவுட் நட்சத்திரமான அர்னால்டுக்கு இந்தியாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications