twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எனக்கு பேஸ்புக், டிவிட்டர் அறவே பிடிக்காது - அவதார் ஜேம்ஸ் காமரூன் ஆச்சரியப் பேட்டி

    |

    லாஸ் ஏஞ்சலெஸ்: உலகமே பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் விழுந்து புரண்டு கொண்டிருக்கிறது.

    ஆனால் பல அட்டகாசமான படங்களைக் கொடுத்த ஹாலிவுட்டின் அதி நவீன தொழில்நுட்ப இயக்குநரான ஜேமஸ் காமரூனுக்கோ இது இரண்டுமே பிடிக்காதாம்.

    இதெல்லாம் வெட்டி வேலை என்றும் கூடுதலாகச் சொல்லி மேலும் ஆச்சரியப்படுத்துகிறார் காமரூன்.

    வியப்பில் ஆழ்த்தும் காமரூன்:

    வியப்பில் ஆழ்த்தும் காமரூன்:

    தொழில்நுட்பப் பிரியராக இருந்தாலும் இந்த இரண்டையும் அவர் விரும்பவில்லை என்று காமரூன் கூறியிருப்பது உண்மையிலேயே ஒரு வியப்புக்குரிய செய்திதான்.

    சூப்பர் இயக்குனர்:

    சூப்பர் இயக்குனர்:

    அவதார், டைட்டானிக் ஆகிய இரு பெரும் சூப்பர் படங்களின் இயக்குநர் காமரூன். தனது பேட்டியில் அவர் மேலும் கூறியிருப்பதைப் பாருங்களேன்!

    உலகுக்கு தெரிய அவசியமில்லை:

    உலகுக்கு தெரிய அவசியமில்லை:

    நான் ஒவ்வொரு நொடியிலும் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதை உலகுக்குச் சொல்லிக் கொண்டிருக்க விரும்பவில்லை. நான் செய்யும் ஒவ்வொரு வேலையையும் எல்லோரும் அறிய வேண்டும் என்று நான் விரும்பவில்லை.

    நிஜத்தில் யாரும் வாழ்வதில்லை:

    நிஜத்தில் யாரும் வாழ்வதில்லை:

    விமான நிலையத்துக்குப் போனால் மக்களைப் பார்த்தால், ஒவ்வொருவரும் இந்த உலகத்துடன் சம்பந்தம் இல்லாதவர்கள் போலவே இருக்கிறார்கள். யாருமே நிஜத்தில் இல்லை. அந்த நிமிடத்தை அவர்கள் அனுபவிக்கவில்லை. மாறாக எதிலாவது மூழ்கியிருக்கிறார்கள்.

    தனிப்பட்ட விருப்பம்:

    தனிப்பட்ட விருப்பம்:

    ஸ்மார்ட் போன்கள், பேஸ்புக், டிவிட்டர் ஆகியவற்றை நான் விரும்புவதில்லை. அது எனது தனிப்பட்ட விருப்பம்.

    நேரம் பொன் போன்றது:

    நேரம் பொன் போன்றது:

    எனது நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை. ஏதாவது ஒரு சாதனத்தில் விழுந்து கிடக்க பிடிக்கவில்லை. அதை நான் செய்யவும் மாட்டேன்.

    பிடிக்காத தொழில்நுட்பம்:

    பிடிக்காத தொழில்நுட்பம்:

    தொழில்நுட்பத்தை விரும்பாதவன்தான் நான். என்னை "லுட்டைட்" என்று கூட கூறிக் கொள்ளுங்கள். ஆனால் அதி தொழில்நுட்ப "லுட்டைட்" நான்.

    லூட்டைட் நான்:

    லூட்டைட் நான்:

    லுட்டைட் என்றால், 1800 களில் புதிதாக அறிமுகமான நெசவு இயந்திரத்தை விரும்பாத ஆங்கிலேய தொழிலாளர்கள் அந்த இயந்திரத்தை மொத்தமாக சேர்ந்து அடித்து உடைத்து அழித்தனர். அவர்களுக்குத்தான் லுட்டைட் என்று பெயர்.

    சிரிப்பு வருகின்றது:

    சிரிப்பு வருகின்றது:

    1983 ஆம் ஆண்டு எனது காரில் செல்போன் இருந்தது. செல்போனை வைத்திருந்த முதல் சில மனிதர்களில் நானும் ஒருவன். அப்போது அது ஆச்சரியமாக இருந்தது. இப்போது அதைப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது என்றார் காமரூன்.

    அவதாரங்களின் தலைவன்:

    அவதாரங்களின் தலைவன்:

    1984 ஆம் ஆண்டு வந்த டெர்மினேட்டர் படம்தான் காமரூனுக்குப் புகழைத் தேடித் தந்தது. அதன் பின்னர் டைட்டானிக், அவதார் என்று புதுப் புது அவதாரங்களில் உலகை மெய் மறக்க வைத்தவர் காமரூன்.

    ஆகஸ்டில் புதிய படம்:

    அதேபோல தனது புதிய படமான டீப் சீ சேலஞ்ச் படத்திற்காக புதிதாக ஒரு நீர்மூழ்கிக் கப்பலையே கட்டியவர் காமரூன். இந்தப் படம் ஆகஸ்ட் 8 ஆம் தேதி திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    He's one of Hollywood's most tech-savvy directors, but don't expect James Cameron to be fan of Twitter or FACEBOOK - he thinks they're a waste of time.'I don't want to be that available to the world. I don't want to share every single thing I do,' said the maker of computer-generated blockbusters Avatar and Titanic.'I look around the airport, and every single person is oblivious to the world around them. They don't live in the moment.'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X