”ஹேய்... நாந்தான் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் பட வில்லன் டா”-சொல்கிறார் 'ஹாலிவுட் விஜயகாந்த்' டிரவோல்டா!

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் நடிகர் ஜான் டிரவோல்டா அடுத்த ஜேம்ஸ்பாண்ட் பட வரிசையில் தான் வில்லனாக நடிக்க விரும்புவதாக கூறியுள்ளார்.

ஹாலிவுட்டின் பிரபலமான நாயகர்களில் ஒருவர் டிரவோல்டா. இவரது படங்கள் எல்லாமே சண்டைப் படங்கள்தான்.

பெரிய பெரிய துப்பாக்கிகளைத் தூக்கிக் கொண்டு அனாயசமாக சண்டை போடுவது இவரது தனி பாணியாகும்.

ஹாலிவுட் விஜயகாந்த்:

ஹாலிவுட் விஜயகாந்த்:

டிரவோல்டாவின் படங்களுக்கும், விஜயகாந்த் படங்களுக்கும் சின்னச் சின்ன வித்தியாசம்தான். இரண்டிலுமே லாஜிக் பிரச்சினை நிறையவே இடிக்கும். எனவேதான் டிரவோல்டாவை செல்லமாக ஹாலிவுட் விஜயகாந்த் என்று சொல்வார்கள் சில ரசிகர்கள்.

அதிரடி மச்சான்:

அதிரடி மச்சான்:

ஆனால் ஹாலிவுட்டில் பல அதிரடியான படங்களைக் கொடுத்தவர் இந்த டிரவோல்டா. இப்போது இன்னொரு அதிரிடியான களத்திற்குள் நுழைய இவர் பிரியப்பட்டு தனது விருப்பத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

பல்ப் பிக்‌ஷன் வில்லன் நாந்தாங்கோ:

பல்ப் பிக்‌ஷன் வில்லன் நாந்தாங்கோ:

"பல்ப் பிக்‌ஷன் " பட நட்சத்திரமான இவரும்,பாண்ட் படங்களின் தயாரிப்பாளர் பார்பரா பிரக்கோலியும் ஜேம்ஸ் பாண்டின் 24வது வரிசையில் இவர் நடிப்பதற்கான சாத்திய கூறுகளை பற்றி ஆலோசித்ததாக ரோலிங் ஸ்டோன் பத்திரிக்கையால் கூறப்படுகிறது.

நான் வித்யாசமான வில்லண்டா:

நான் வித்யாசமான வில்லண்டா:

"அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படத்தில் வித்யாசமான வில்லனுக்குன் முயற்சித்து வருகின்றனர்.பார்பரா இந்த கருத்தை விரும்புவதோடு இதனை ஏற்றும் கொண்டுள்ளார்.எனவே இது சிறப்பாக அமையும்"என்று ஜான் கூறியுள்ளார்.

தொடர்ச்சி

தொடர்ச்சி

இந்த 24ஆவது படமானது 2012ஆம் ஆண்டின் "ஸ்கை பால்ஸ்" படத்தின் தொடர்ச்சியாக அமையும் எனவும்,இது வரும் 2015 நவம்பரில் திரைக்கு வரும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மீண்டும் ஜோடி:

மீண்டும் ஜோடி:

இதில் இயக்குனர் சாம் மெண்டாஸ் மற்றும் நடிகர் டேனியல் கிரேக் மீண்டும் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X