பெண் ஹல்க்காக இவங்க நடிச்சா நல்லா இருக்கும்.. டெசா தாம்சன் தான் ஹல்க்கின் சாய்ஸ்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: கடந்த 2012ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை ஹல்க் கதாபாத்திரத்தில் மார்க் ரஃபலோ நடித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட்டில் நடந்த டி23 எக்ஸ்போ மாநாட்டில் பேசிய மார்வெல் தயாரிப்பாளர் கெவின் ஃபெய்க், மார்வெல் உலகில் இனி ஆம்பள ஹல்க் மட்டும் அல்ல பெண் ஹல்க்கும் கலக்க உள்ளார் என்றார்.

இந்நிலையில், She-Hulk ஆக டெசா தாம்சன் நடித்தால் சரியாக இருக்கும் என ஹல்க் நடிகர் மார்க் ரஃபலோ தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

வாய்ப்பிருக்கா

மார்வெல் உலகை பொருத்தவரையில் ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு தனித்துவ சூப்பர் ஹீரோ கதாபாத்திரம் ஒதுக்கப்படும். ஏற்கனவே டெசா தாம்சன், தோர் உலகில் இருக்கும் வால்கையர் கதாபாத்திரத்தில் எண்ட்கேம் படம் வரை நடித்துள்ளார். இதனால், மார்க் ரஃபலோவின் இந்த விருப்பம் பரிந்துரை செய்யப்படுமா என்பது சந்தேகம் தான்.

முதன் முதலில்

முதன் முதலில்

ஷீ-ஹல்க் கதாபாத்திரம் முதன் முதலில் 1980ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான காமிக்ஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. ஸ்டான் லீ மற்றும் ஜான் புஸ்ஸிமா இணைந்து தான் மற்ற கதாபாத்திரங்களை உருவாக்கியது போல இந்த கதாபாத்திரத்தையும் உருவாக்கியுள்ளனர். விரைவில் ஷீ-ஹல்க் குறித்த படம் மார்வெல் தயாரிப்பில் வெளியாகவுள்ளது.

ஷீ-ஹல்க்

ஹல்காக மாறும் புரூஸ் பேனரின் உறவுக்காரப் பெண்ணான ஜெனிஃபர் வால்டர்ஸ் தான் ஷீ-ஹல்க்காக உருவாகிறார். வழக்கறிஞராக தொழில் செய்து வரும் ஜெனிஃபர் வால்டருக்கு ஒரு சந்தர்ப்பத்தின் போது ஹல்க்கின் ரத்தம் செலுத்தப்பட அவர் ஷீ-ஹல்க்காக மாறுகிறார். காமிக் ரசிகர்களிடையே ஷீ-ஹல்க் கதாபாத்திரமும் மிகவும் பிரபலமான ஒன்றுதான்.

விருப்பம்

விருப்பம்

ஷீ-ஹல்க் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல அமெரிக்க நடிகை ஸ்டெபனி பீட்ரிஸ் விருப்பம் தெரிவித்துள்ளார். ஆஜான பாகுவான உடலமைப்பு கொண்ட ஸ்டெபனி பீட்ரிஸ் ஷீ-ஹல்க் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துவார் என்றும் மார்வெல் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், ஹல்க் நடிகர் மார்க் ரஃபலோவின் அந்த ஆசையால் யார் ஷீ-ஹல்க்காக மார்வெல் ரசிகரக்ளை திருப்தி செய்யப் போகின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Read more about: hollywood
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X