For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  தி சீக்ரெட் வில்லேஜ் - இந்திய தமிழர் இயக்கிய ஹாலிவுட் படம்

  By Shankar
  |

  இந்தியத் தமிழர் சுவாமிகந்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள தி சீக்ரெட் வில்லேஜ் என்ற ஹாலிவுட் படம், தமிழ் உள்பட பல மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது.

  ஜோனாதன் பென்னட் , அலிஃபால்க்னர், ஸ்டெலியேசவன்டே, ரிச்சர்ட்ரைல் மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் கதையை ஜேசன்பி.விட்டியருடன் இணைந்து எழுதியிருக்கிறார் சுவாமிகந்தன்.

  50வது படம்

  50வது படம்

  ஜோனாதன் பென்னட்-ன் 50வது படம் இந்த ‘தி சீக்ரெட் வில்லேஜ்'. இவர் ‘மெமோரியல்டே', மீன்கேர்ள்ஸ்' படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.

  அலிஃபால்க்னர், தி டிவிலைட் சகா, பிரேக்கிங் டான் - பார்ட் 1 மற்றும் "பேட்கிட்ஸ்கோடூஹெல்"படத்திலும், ஸ்டெலியேசவன்டே-"ஏ பியூட்டிபுல்மைன்ட்," "அக்லிபெட்டி" படத்திலும் நடித்தவர். ‘ஹாலோவின்', ஆபீஸ்ஸ்பேஸ்" படங்களில் நடித்தவ ரிச்சர்ட் ரைலுக்கு இது 210வது படம்.

  கதைச் சுருக்கம்

  கதைச் சுருக்கம்

  ஒரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள், திடீர் திடீரென நோய் வாய்ப்பட்டு இறந்து போவது தொடர்கதையாக நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் வந்தால் இந்த திகில் சம்பவங்கள் நடப்பது புரியாத புதிராக உள்ளது.

  வெற்றிபெற முடியாத திரைக்கதை ஆசிரியரான கிரேக் (ஜோனாதன் பென்னட்), துணிச்சல் மிக்க பத்திரிகையாளரான ராச்சேல் (அலிஃபால்க்னர்) இருவரும் அந்த கிராமத்திற்கு சென்று ஒரு வீடு எடுத்து தங்கி இந்த மர்மத்தைக் கண்டுபிடிக்க முயல்கிறார்கள். இவர்களது ஆராய்ச்சிக்கு அந்த கிராமத்தைச் சேர்ந்த எவரும் ஒத்துழைப்புக் கொடுக்க மறுக்கும் நிலையில் ஒரே ஒருவர் மட்டும் இவர்களுக்கு உதவ முன் வருகிறார். இவர்களோடு பேசிய மறுநாள் அந்த நபரும் திடீரென இறந்து போக அதிர்ச்சி மேலும் அதிகமாகிறது.

  அந்த கிராமத்தைச் சேர்ந்த ஜோ (ஸ்டெலியோசவன்டே), ஜேஸன் (கெப் லீ) அந்த கிராமத்தின் வழிபாட்டு நடவடிக்கைகளை ரகசியமாக காத்து வருகிறார்கள்.

  ஒரு சந்தர்ப்பத்தில் கிரேக் காணாமல் போகிறார். இதனால் தனித்து விடப்படும் ராச்சேல் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ள ரகசியங்களை வெளிக்கொண்டு வருவதை திகில் நிறைந்த காட்சிகளோடு சொல்லியிருக்கிறார்கள்.

  சுவாமி கந்தன்

  சுவாமி கந்தன்

  ஃபிலெடெல்பியாவைச் சேர்ந்த இப்படத்தின் இயக்குனரான சுவாமிகந்தன் இந்தியாவில் பிறந்து வளர்ந்து அமெரிக்காவில் செட்டில் ஆனவர். அமெரிக்காவிற்குச் சென்ற பின், திரைப்படத் தயாரிப்பு, விஷுவல் எபெக்ட்ஸ் மற்றும் திரைப்பட மார்க்கெட்டிங் பற்றிய படிப்பை நியூயார்க் பல்கலைக்கழகத்திலுள்ள ஃபிலிம்ஸ் கூலில் படித்தவர்.

  கேட்ச் யுவர் மைன்ட்

  கேட்ச் யுவர் மைன்ட்

  2008ல் வெளிவந்த ‘கேட்ச் யுவர் மைன்ட்' என்ற படம்தான் சுவாமி கந்தன் எழுதி, இயக்கி, தயாரித்த முதல் ஹாலிவுட் படம். குடும்பக் கதையான இப்படம் அமெரிக்கா, கனடா, கரீபியன்தீவுகள் ஆகிய இடங்களில் குறிப்பிட்ட திரையரங்குகளில் வெளியானது. 2009ல் டிவிடி வடிவில் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது.

  அக்டோபர் ரிலீஸ்

  அக்டோபர் ரிலீஸ்

  தற்போது திகில், மர்மப்படமான ‘திசீக்ரெட்வில்லேஜ்' படத்தை முடித்துள்ளார். ‘தி பெர்க்ஷயர்ஸ்' என்ற இடத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.

  இந்த ஆண்டு அக்டோபர் மாதம் இப்படம் உலகம் முழுவதும் வெளிவரத் தயாராகஉள்ளது.

  அடுத்து தி மெசெஞ்சர்

  அடுத்து தி மெசெஞ்சர்

  ‘தி மெசென்சர்' என்ற ஆக்ஷன் திரில்லர் படத்தையும் தற்போது இயக்கி வருகிறார். ஆரம்ப நிலையில் உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கவிருக்கிறது.

  சுவாமிகந்தன் மற்றும் டாக்டர் ராஜன் இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரித்திருப்பதோடு, உலகம் முழுவதும் வெளியிடுகிறார்கள்.

  English summary
  Indian Tamil origin Swamy Kanthan's big Hollywood film The Secret Village will release this October all over the world in many languages.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X