காமசூத்ரா நடிகைக்கும் கொரோனா பாதிப்பு.. படுத்தப்படுக்கையா ஆயிட்டேன்.. உஷாரா இருங்க என எச்சரிக்கை!

லண்டன்: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், காமசூத்ரா பட நடிகையையும் விட்டு வைக்கவில்லை.

இங்கிலாந்து நடிகையான இந்திரா வர்மாவுக்கும் கொரோனா நோய் பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

1996ம் ஆண்டு வெளியான காமசூத்ரா படத்தில் நாயகியாக நடித்திருந்த இந்திரா வர்மா, பல ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

இந்திரா வர்மா

இந்திரா வர்மா

காமசூத்ரா படத்தின் மூலம் அறிமுகமான இந்திரா வர்மா, ரோம், கேம் ஆஃப் த்ரோன்ஸ், லூதர், பேசிக் இன்ஸ்டின்க்ட் 2, எக்ஸோடஸ் செக்ஸ் அண்ட் டெத் 101 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். நேற்று முன் தினம் தனக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது என்பதை தனது இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்துள்ளார் இந்திரா வர்மா.

படுத்தப்படுக்கை

படுத்தப்படுக்கை

மேலும், கொரோனா வைரஸ் தாக்கம் மோசமாக இருப்பதாகவும், படுக்கையிலே கிடக்கிறேன் என்றும், கொரோனா வைரஸை சாதாரணமாக எண்ணி யாரும் அலட்சியப்படுத்த வேண்டாம் என்றும் இந்திரா வர்மா தனது பதிவில் மிகவும் உருக்கத்துடன் குறிப்பிட்டுள்ளார். இந்திரா வர்மாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

பீனிக்ஸ் பறவை போல

பீனிக்ஸ் பறவை போல

கேம் ஆஃப் த்ரோன்ஸ் வெப் தொடரின் 4வது சீசனில், எலாரியா சாண்ட் எனும் கதாபாத்திரத்தில் நடிகை இந்திரா வர்மா என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து 5வது சீசனில் தனது நடிப்பால் வர்மா கலக்கினார். கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் இந்திரா, மீண்டும் பீனிக்ஸ் பறவை போல எழுந்து பறப்பேன் என்றும் பதிவிட்டுள்ளார்.

ஹாலிவுட் நடிகர்கள்

ஹாலிவுட் நடிகர்கள்

டாம் ஹேங்ஸ், ரிட்டா வில்சன், இத்ரிஸ் எல்பா, ஓல்கா குரிலென்கோ, ரேச்சல் மேத்யூஸ் உள்ளிட்ட ஹாலிவுட் நடிகர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது அந்த வரிசையில் காமசூத்ரா, கேம் ஆஃப் த்ரோன்ஸ் உள்ளிட்டவற்றில் நடித்த இந்திரா வர்மாவுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X