’வலிமை'க்கு பின் ரிலீசாகும் "அயர்ன் மாஸ்க்": தமிழ் பேசி வரும் ஜாக்கிசான் -அர்னால்டு
சென்னை; ஜாக்கி சான், அர்னால்ட் இருவரும் இணைந்து நடித்த "அயன் மாஸ்க்" படம் வெளியீடு வலிமை'க்கு பிறகு வருகிறது. மிக அதிக பொருட்செலவில் இரண்டு சூப்பர் ஸ்டார்கள் இணைந்து கலக்கும் இப்படம் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Recommended Video
மேலை நாடுகளில் வசூலை வாரிக்குவித்த அயன் மாஸ்க்
சைனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் பெரும் வசூலை வாரிக் குவித்த "அயர்ன் மாஸ்க்" ஆங்கிலப் படம், தமிழ் மக்களின் உள்ளத்தை வாரிக் குவிக்க தமிழில் வருகிறது.

4.9 பில்லியன் பட்ஜெட்
வெறித்தனமான சண்டைக் காட்சிகளும், மகிழ்ந்து சிரிக்க காமெடி காட்சிகளும் அரங்கத்தை அதிர வைக்கப் போகிறது. 49.1 பில்லியன் பட்ஜெட்டில் உருவான பிரமாண்டமான படம்.!

ஜாக்கிச்சான் - அர்னால்டு கலக்கல்
டிராகனை அழித்து, மகாராணியை காப்பாற்ற ஜாக்கி சான் சைனா செல்கிறார். ஜாக்கி சானை அர்னால்ட் முதலில் துரத்துகிறார். பிறகு இருவரும் இணைந்து டிராகன் மற்றும் வில்லனுடன் படுபயங்கரமாக மோதுகிறார்கள். இறுதியில் டிராகனை அழித்தார்களா, மகாராணியை காப்பாற்றினார்களா என்பதே கதை!

தமிழ் பேசும் ஹாலிவுட் படம்
இரண்டு மணி நேர படமாக, இருவரும் ரசிகர்களை மகிழ்விக்க தமிழ் பேசி வருகிறார்கள். ஜூராசிக் பார்க், கிங்காங் போன்ற படங்களை தமிழில் வெளியிடப்பட்ட பிரபல நிறுவனமான ஹன்சா பிக்சர்ஸ் "அயர்ன் மாஸ்க்" படத்தை தமிழில் வெளியிடுகிறது!

வலிமைப்படத்திற்கு பின் ரிலீஸ்
வலிமைப்படம் வெளியான பின்னர் இப்படம் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது. இந்த ஆண்டு மிகச்சிறந்த எண்டெர்டெயின்மெண்ட் பிக்சராக இது இருக்கும், நகைச்சுவை கலந்த ஆக்ஷன் படம் அதுவும் தமிழில் என்பதால் ரசிகர்கள் மிகவும் விரும்பிப்பார்க்கும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











