twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஃப்ரோஸன் கற்பனைக் கதையா? புராண கதையா?

    டிஸ்னி தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ஃப்ரோஸன் 2 திரைப்படம் வரும் நவம்பர் மாதம் 22ம் தேதி திரைக்கு வருகிறது. இதன் முதல் பாகமான ஃப்ரோஸன் திரைப்படம் இரண்டு ஆஸ்கர்களை வென்றது குறிப்பிடத்தக்கது.

    |

    நியூயார்க்: இரண்டு ஆஸ்கர்களை வென்ற ஃப்ரோஸன் படத்தின் இரண்டாம் பாகம் ஃப்ரோஸன் 2 எனும் பெயரில் வரும் நவம்பர் 22ம் தேதி திரைக்கு வருகிறது.

    டிஸ்னி தயாரிப்பில் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்த ஃப்ரோஸன் 2 படத்தின் ரிலீசுக்காக உலகளவில் உள்ள ஃப்ரோஸன் ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர்.

    Is Disneys Frozen A Fairytale or Myth? Is it both?

    எல்சா மற்றும் ஆன்னாவின் மாயாஜால உலகை மீண்டும் நம் கண் முன் கொடுக்கும் முயற்சியில் டிஸ்னி, உலகமெங்கும் இந்த படத்தை ரிலீஸ் செய்கிறது.

    2013ம் ஆண்டு வெளியான ஃப்ரோஸன் படம் சிறந்த அனிமேஷன் திரைப்படம் மற்றும் சிறந்த பாடல் என இரு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை அள்ளியது.

    ஃப்ரோஸன் 2' எடுக்க இவ்வளவு காரணங்கள் இருக்கிறதா?ஃப்ரோஸன் 2' எடுக்க இவ்வளவு காரணங்கள் இருக்கிறதா?

    இந்த ஃப்ரோஸன் படம் குழந்தைகளுக்கு இரவு நேரத்தில் தூங்குவதற்காக சொல்லப்படும் கற்பனைக் கதையா? அல்லது புராண தொடர்பு இருக்கிறதா? என்ற கேள்விக்கு, இரண்டுமே என பதிலளித்துள்ளார் படத்தின் இயக்குநர் ஜெனிஃபர் லீ.

    ஆனால், முதல் பாகம் எடுக்கும் போது தங்களுக்கு இதுகுறித்து தெரியாது என்றும் எல்சா கதாபாத்திரம் புராண தொடர்பு கொண்டதாகவும், ஆனால், அவளது தங்கை கதாபாத்திரமான ஆன்னா முற்றிலும் கற்பனைக் கதை என்றும் ஜெனிஃபர் லீ கூறியுள்ளார்.

    இரண்டாம் பாகத்தில் அக்கா எல்சா ஒரு பெரிய பிரச்னையில் மாட்டிக் கொள்வார் என்றும், அந்த பிரச்னையில் இருந்து அக்காவை காப்பாற்ற தனது உயிரையே பணயம் வைத்து ஆன்னா செய்யும் சாகசம் ரசிகர்களை வெகுவாக கவரும் என்ற சர்ப்ரைஸ் தகவலையும் இயக்குநர் வெளியிட்டுள்ளார்.

    முதல் பாகத்தை போலவே இந்த பாகத்திலும் இசைக்கு தனி முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவில் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வரும் நவம்பர் 22ம் தேதி ரிலீஸ் செய்யப்படவுள்ளது.

    English summary
    Is 'Frozen' a fairytale or mythology? The makers of the Disney film 'Frozen' realised that unknowingly they had both a fairytale and mythology running together in the first film.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X