twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ’Iron Man 2’ ஆக நடிக்கிறாரா டாம் குரூஸ்...விவாதத்தில் ஈடுபடும் ரசிகர்கள்

    |

    'மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ்' மூவியில் உள்ள டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் படத்தில் டாம் குரூஸ் படத்தில் அயர்ன் மேனாக நடிப்பதாக போட்டோ வெளியாகியுள்ளதாக இணையத்தில் அவரது ரசிகர்களிடையே விவாதம் எழுந்துள்ளது. முதல் அயர்ன் மேன் உயிரிழந்து விட்டதாக படத்தை முடித்த நிலையில் இரண்டாவதாக வரப்போகும் அயர்ன்மேனாக டாம்குரூஸ் நடிக்க உள்ளதாக தகவல் பரவுகிறது.

    கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போகும் படத்தின் ஹீரோயின் இவர் தானா? வேறலெவல் தான் போங்க!கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போகும் படத்தின் ஹீரோயின் இவர் தானா? வேறலெவல் தான் போங்க!

    ‘மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ்' மூவியில் அயர்ன் மேனாக டாம் குரூஸ்?

    ‘மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ்' மூவியில் அயர்ன் மேனாக டாம் குரூஸ்?

    சமூக ஊடகங்களில் வெளிவந்த 'மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ்' படத்தின் செட்களில் இருந்து ஒரு போட்டோவில் அதுவும் தெளிவில்லாத மங்கலான படத்தில், டாம் குரூஸைப் போன்ற ஒரு நபர் மோஷன் கேப்சர் சூட் அணிந்திருப்பதை போட்டு ட்விட்டரில் வெளியாகியுள்ளது. டாம் குரூஸின் அயர்ன் மேனுக்காக #DoctorStrange2 இல் (மோஷன் கேப்சர்) அமைக்கப்பட்ட முதல் படமாக இருக்கலாம்" என்று பதிவிடப்பட்டுள்ளது.

    முதன் முதலில் அயர்ன் மேனாக கேட்கப்பட்ட டாம் குரூஸ்

    ஏற்கெனவே முதன்முதலில் 2008 ஆம் ஆண்டு டாம்குரூஸையே அயர்ன்மேன் கதைக்கு அந்நிறுவனம் கேட்டப்போது அவர் நடிக்க மறுத்தப்பின் தான் ராபர்ட் டவுனி ஜூனியர் நடித்து பிரபலமானார். சாதாரணமாக இருக்கும்போது டாக்டர் பிரவுனியாகவும் பின்னர் அயர்ன் மேனாக மாறும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ராபர்ட் டவுனி ஜூனியர் ஹாலிவுட்டில் பிரபலமானார். அதன் பின்னர் அவெஞ்சர்ஸ் கதையில் அயர்ன்மேன் கதா பாத்திரம் பிரபலமானது.

    இதுவரை வந்துள்ள அயர்ன் மேன் படங்கள்

    இதுவரை வந்துள்ள அயர்ன் மேன் படங்கள்

    அயர்ன் மேன் பாத்திரமாக 3 படமும், அவெஞ்சர்ஸ், ஸ்பைடர்மேன் போன்ற படங்களில் 7 படங்கள் என 10 படங்களில் ராபர்ட் டவுனி ஜூனியரே நடித்திருப்பார். இதேபோல் டாம் குரூஸுக்கு தற்போது 59 வயது ஆகிறது. 1962 ஆம் ஆண்டு பிறந்த அவர் தனது 19 வது வயதில் ப்ரூக்‌ஷீல்டு படத்தில் அறிமுகமானார். 1983 ஆம் ஆண்டு ரிஸ்கி பிஸ்னெசில் ஹீரோவாக நடித்தார்.

    டாம் குரூஸ் எனும் அதிரடி ஹீரோ

    டாம் குரூஸ் எனும் அதிரடி ஹீரோ

    ஹாலிவுட் ரசிகர்களை கடந்து உலகம் முழுவதும் ரசிகர்களால் அதிரடி ஹீரோவாக பிரபலமானார் டாம் குரூஸ். அவருக்கென தனி ரசிகர் கூட்டம் உருவானது. தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அவர் 2000 ஆம் ஆண்டிலிருந்து மிஷன் இம்பாசிபிள் என்கிற சயின்ஸ் பிக்‌ஷன், திரில்லர் கலந்த ஆக்‌ஷன் படங்களில் நடிக்க ஆரம்பித்து பிரபலமானார். தனது படங்களில் ஸ்டண்ட் காட்சிகளில் தானே நடித்து பிரபலமானார். மிஷன் இம்பாசிபிள் படங்கள் வரிசையாக 6 படங்கள் இதுவரை வந்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் 7 வது படம் வர உள்ளது.

    அடுத்து வர உள்ள மிஷன் இம்பாசிபிள், டாப் கன் - 2 படங்கள்

    அடுத்து வர உள்ள மிஷன் இம்பாசிபிள், டாப் கன் - 2 படங்கள்

    2022 ஆண்டு டாப் கன் இரண்டாம் பாகம் படம் மீண்டும் வர உள்ளது. 2024 ஆம் ஆண்டு மிஷன் இமாசிபிள் 8 வர உள்ளது. டாம்குரூஸ் ஸ்டீவன் ஸ்பீல்பர்க் படமான வார் ஆஃப்தி வேர்ட்ஸ் படத்திலும் நடித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு வரை பிசி ஷெட்யூலில் இருக்கிறார் டாம்குரூஸ். இந்நிலையில் தான் அயர்ன் மேன் அடுத்த வெர்ஷனில் டாம் குரூஸ் அயர்ன் மேனாக நடிக்கிறார் என்கிற தகவல் ஒரு ட்விட்டர் பதிவின் மூலம் பரவுகிறது.

    'அயர்ன் மேன்' ஹீரோ ராபர்ட் டவுனி ஜூனியர்

    'அயர்ன் மேன்' ஹீரோ ராபர்ட் டவுனி ஜூனியர்

    அயர்ன் மேன் முதல் பாகம் தொடங்கி 10 பாகம் வரை நடித்த ராபர்ட் டவுனி ஜூனியர் கடைசி பாகத்தில் இறந்துபோவதாக காட்டி முடித்துள்ளனர். ராபர்ட் டவுனி ஜூனியர் தனது அசாத்தியமான நடிப்பால் தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் எனலாம். அவரது மிகப்பிரபலமான வசனமான ஐயம் அயர்ன் மேன் ரசிகர்களிடையே மிகப்பிரபலம். அடுத்த பாகம் வேறு யூனிவர்சில் நடப்பதால் அதில் டாம் குரூஸை ஹீரோவாக அயர்ன் மேனாக அறிமுகப்படுத்தலாம் என்கிற வாதம் வைக்கப்படுகிறது.

    என்னதான் டாம் குரூஸ் மிகப்பெரிய ஹாலிவுட் நடிகராக இருந்தாலும், அவரையே அயர்ன் மேனாக நடிக்க ஆரம்பத்தில் பட நிறுவனம் அணுகி அவர் மறுத்ததால், அயர்ன் மேன் நடிகர் ட்வுனி ஜூனியர் அயர்ன் மேனாக ரசிகர்கள் மனத்தில் நாற்காலி போட்டு அமர்ந்து விட்டார்.

    அடுத்த அயர்ன் மேனாக டாம் குரூஸ்

    அடுத்த அயர்ன் மேனாக டாம் குரூஸ்

    இனி அடுத்த யூனிவர்ஸில் அயர்ன்மேனாக டாம் குரூஸ் வெற்றியடைவாரா என்பது சிரமமே என்கிற வாதமும் வைக்கப்படுகிறது. முதல் காரணம் ஏற்கெனவே இதேப்போன்று ஜார்ஜ் ஆஃப் த ஜங்கிள் ஹீரோ பிரன்டன் ஃபிரேசர் நடித்த கதாபாத்திரத்தில் டாம் குரூஸ் நடிக்க அந்தப்படத்தில் பிரன்டன் ஃபிரேசரை உருவகபடுத்தி பார்த்த ரசிகர்கள் டாம் குரூஸை ஏற்க மறுத்ததால் படம் ஓடவில்லை.

    ரசிகர்கள் ஏற்பார்களா?

    ரசிகர்கள் ஏற்பார்களா?

    தற்போது 10 படங்களில் அயர்ன் மேனாக நடித்த டவுனி பிரவுனி இடத்தில் டாம் குரூஸ் நடிப்பதை அந்தப்படத்தை ரசித்த நடிகர்கள் ஏற்க மாட்டார்கள், 2024 வரை பிசியாக இருக்கும் டாம்குரூஸ் நடிக்க வாய்ப்பில்லை என்றும் வாதம் வைக்கப்படுகிறது.

    மீண்டும் கேப்டன் அமெரிக்கா

    மீண்டும் கேப்டன் அமெரிக்கா

    கடைசியாக 2019 ஆம் வெளி வந்த அவெஞ்சர்ஸ் படத்தில் அயர்ன்மேனுடன் சேர்ந்து கேப்டன் அமெரிக்காவும் அழிந்துபோவதாக கதையை முடித்திருந்தனர். தற்போது வரவுள்ள படத்தில் ஃபண்டாஸ்டிக் 4 படத்தில் நடித்த நெருப்பு மனிதன் கிரிஸ் எவன்ஸ் பின்நாளில் கேப்டன் அமெரிக்காவாக அவதாரமெடுத்தார். அடுத்து வரவுள்ள படத்தில் கிரிஸ் எவன்ஸ் பழையபடி நெருப்பு மனிதனாக அல்லது ஹைட்ராக் கேப்டன் அமெரிக்காவாகவும் வர உள்ளதாகவும் அல்லது இரண்டு கேரக்டராக வர உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    English summary
    Is Tom Cruise Acting in Iron Man 2 Movie? Netizens Start Discussing on Social Media
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X